Monday, March 5, 2012

வாக்குகளை பெற காந்தியின் பெயரை பயன்படுத்தும் ஒபாமா!

Obama invokes Gandhi, Mandela in support for second term
வாஷிங்டன்:அதிபர் தேர்தலில் 2-வது தடவையாகவும் போட்டியிடவிருக்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, கடும் சவாலை எதிர்கொள்ள காந்தி மற்றும் நெல்சன் மண்டேலாவின் பெயரை உபயோகிக்க துவங்கியுள்ளார்.


இதுக்குறித்து அவர் கூறியது: ‘எனது முன்மாதிரிகளான காந்தி மற்றும் நெல்சன் மண்டேலாவின் விழுமியங்களை இறுகப் பற்றிக் கொண்டு மாற்றங்களை அமெரிக்காவில் ஏற்படுத்த இன்னும் கால அவகாசம் வழங்கவேண்டும். மாற்றத்திற்காக வாக்கு கேட்டு 2008 – ஆம் ஆண்டு வெற்றி பெற்றபோதிலும் கொடுத்த வாக்குறுதிகளில் பல முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. விரும்பியது போல் மாற்றம் கொண்டுவர கடுமையான சிரமங்கள் ஏற்படும்.

காந்தியும், மண்டேலாவும் உலகில் ஏற்படுத்திய மாற்றங்கள் கடுமையான சோதனைகளை சந்தித்த பிறகே ஆகும். இதற்கு கால அவகாசம் தேவை. அதிபர் என்ற நிலையில் 100 சதவீதம் வெற்றி பெறவில்லை. ஆனால், நான் நம்பும், நிலையான காரியங்களை மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளேன்.’ இவ்வாறு ஒபாமா கூறியுள்ளார்.

நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment