லண்டன்:அனுஜ் பித்வே என்னும் இந்திய மாணவர் கடந்த வாரம் மான்செஸ்டரில் கொல்லப்பட்டதை தொடர்ந்து பிரிட்டிஷ் பாராளமன்றம் முழுமையான அறிக்கை தருமாறு கேட்டுள்ளது.
தொழிலாளர் கட்சியின் எம்.பி கெய்த் வாஸ் மற்றும் உள்துறை கமிட்டியின் தலைவர் ஆகியோர் பித்வேவின் கொலைக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். மாணவர் கொலைக்கு முழு அறிக்கை சமர்பிக்குமாறும் மேலும் பிரிட்டிஷ் அரசு இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வெளிநாட்டு மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் தேவை இருக்கிறது என்று வாஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது; ‘கொலை செய்யப்பட பித்வேவின் பெற்றோர் தங்களது மகனுக்கு நேர்ந்ததை குறித்து உண்மையை அறிய விரும்புகின்றனர்’ என்றும் தெரிவித்தார்.
பித்வே தன்னுடன் படித்த சக மாணவர்கள் 9 பேருடன் இருந்தபோது 2 நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையைத் தொடர்ந்து இதுவரை மான்செஸ்டர் காவல்துறை 4 பேரை கைது செய்துள்ளது. பித்வேவின் கொலை இந்திய மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment