Friday, September 23, 2011

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்


துருக்கியிடம் மன்னிப்புக் கோரப் போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் நெடன் யாஹு தெரிவித்துள்ளார். காஸாவுக்கான உதவி நிவாரணக் கப்பல் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 09 பேர் கொல்லப்பட்டமை தொடர்பில் துருக்கியிடம் இஸ்ரேல் மன்னிப்புக் கோரவேண்டும் என்று அந்நாடு வேண்டியிருந்தது. இதற்குப் பதிலளித்துள்ள நெடன் யாஹுமன்னிப்புக் கோரப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நிவாரணக் கப்பல் மீதான தாக்குதலை அடுத்து அங்காராவிலுள்ள இஸ்ரேலிய தூதர் வெளியேற்றப்பட்டதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பாதிப்படையத் தொடங்கின. தற்போது இது தொடர்பான ஐ.நா.வின் அறிக்கை வெளிவந்துள்ளதை அடுத்துஇஸ்ரேலுக்கெதிரான வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளதாக துருக்கி அறிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலுடனான சகல இராணுவ ஒப்பந்தங்களும் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் துருக்கியின் வெளிவிவகார அமைச்சு கூறுகின்றது.
வெளிவந்துள்ள ஐ.நா. அறிக்கை மவி மர்மரா எனும் துருக்கிய கப்பல் மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல் நியாயமற்றது என்று தெரிவித்துள்ளது. காஸா மீதான பொருளாதாரத் தடையை உடனடியாக நீக்குமாறும் கப்பல் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறும் துருக்கி வேண்டுகோள் விடுத்திருந்தது. சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் கடற்படையினருக்கு எதிரான விசாரணை அவசியம் என்று பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் கூறியுள்ளார்.
by
meelparvai

1 comment:

  1. என்ன சின்ன பிள்ளத்தனமா இருக்கு யார்,யார் மேலே வழக்கு தொடர்வது,அப்படியே வழக்கு தொடர்ந்தாலும் அப்படியே பயந்து போய் உட்கார்ந்து விடுவோமா? கேஸ் போட்டா தான் எங்களுக்கு டானிக் சாப்பிடுவது மாதிரி.அப்ப தான் நாங்க Fresh ஆ புது அட்டாக் பண்ண வசதியா இருக்கும்.

    ReplyDelete