Saturday, October 22, 2011

maruppu in news


குஜராத்தின் அபார வளர்ச்சி? : நரேந்திர மோடியை விமர்சித்த கார்ட்டூனிஸ்ட் கைது!
புதுடெல்லி: அக்டோபர் .3,
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாவிரத நாடகத்தை விமர்சித்து, கார்ட்டூன் வரைந்ததற்காக, ஹிந்தி மாலை நாளிதழின் கார்ட்டூனிஸ்ட் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபாத் கிரண் என்ற ஹிந்தி மாலை நாளிதழின் கார்ட்டூனிஸ்ட், ஹரீஷ் யாதவ்(35), இந்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
செப்டம்பர் 20ம் தேதி, அவர் வரைந்த கார்ட்டூன் அந்த நாளிதழில் வெளியாகியிருந்தது.
மோடியின் உண்ணாவிரத நாடக மேடையில், சில முஸ்லிம் பெயர்தாங்கி மௌலவிகள், மோடிக்கு தொப்பி அணிய முயற்சி செய்தனர்.
ஆனால் மோடி அதனை நிராகரித்து, அவர்களின் முகத்தில் கரியைப் பூசினார்.
இந்த நிகழ்வைக் கருப்பொருளாக வைத்,து ஹரீஷ் அந்தக் கார்ட்டூனை வரைந்திருந்தார்.
குஜராத் இனப் படுகொலையைத் தலைமையேற்று, நடத்திய மோடியை விமர்சித்து, மண்டையோட்டுத் தொப்பியை அணிவிக்க முயற்சிப்பதாக இருந்தது, அந்தக் கார்ட்டூன்.
அந்தக் கார்ட்டூன், வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதாக, பிரபாத் கிரண் ஆசிரியர், பிரகாஷ் புரோஹித் கூறினார்.
எதிர்க்கக்கூடிய அளவுக்கு அந்தக் கார்ட்டூனில் ஒன்றும் இல்லை.
பா.ஜ.க.வின் சிறுபான்மை அணி? மட்டும் தான், அந்தக் கார்ட்டூனை எதிர்த்தது.
காவிக் கட்சிக்காரர்கள், பத்திரிகைச் சுரந்திரத்திற்குப் பங்கம் விளைவிக்க முயற்சி செய்கிறார்கள், என்று அவர் கூறினார்.
எங்களுக்கு நீதி கிடைக்காது : டி. ஐ. ஜி. மனைவி கதறல்! ...என்ன பாவம் செய்தார் டி.ஐ.ஜி,?
அகமதாபாத்: அக்டோபர் 3,
நரேந்திர மோடிக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்த, குஜராத் காவல்துறை ஐ.பி.எஸ், அதிகாரி சஞ்சீவ் பட்டை காவலில் எடுத்து விசாரிக்க, போலீஸுக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்தது.
அவரை நீதிமன்றக் காவலில் சிறை வைக்க உத்தரவிடப்பட்டது.
சஞ்சீவ் பட்டை, தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க, குஜராத் போலீஸ் முடிவு செய்தது.
ஆனால், அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி மறுத்தது.
இதனிடையே, தன் கணவரை போலீஸார் அடித்தே கொன்று விடுவார்கள், என்று அச்சம் எழுந்துள்ளதாக, டிஜிபிக்கு அவருடைய மனைவி சுவேதா, கடிதம் எழுதியுள்ளார்.
அதில், என் கணவரை கைது செய்தவுடன், போலீஸ் நிலைய லாக்-அப்பில் வைத்திருந்தனர்.

பிறகு, கிரைம் பிராஞ்ச் போலீஸிடம் ஒப்படைத்தனர்.
கிரைம் பிராஞ்ச், முதல்வரின் நேரடி கண்காணிப்பில் உள்ள பிரிவு.
மேலும், அவர்கள் என்கவுண்ட்டர் செய்வதில் வல்லவர்கள்.
எனவே, என் கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது.
அவரை கடுமையாக அடித்து உதைத்து, கொன்று விடுவார்கள் என்று அச்சமாக உள்ளது.
என் கணவரை நானோ, வக்கீல்களோ சந்திக்க போலீஸார் அனுமதிக்கவில்லை.
அவருடன் எந்த தகவல் தொடர்பும் இல்லை.
பிறகு எப்படி நாங்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடியும்?

No comments:

Post a Comment