Monday, November 21, 2011

குஜராத் கூட்டு படுகொலை


வி.ஹெச்.பி., மாநில செயலாளர் திலீப் திரிவேதி : அரசு வழக்கறிஞர்

ஸர்தார்புரா சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில், 11 பேர் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களாவர்.
இதனை, அவர்களது உறவினரான அய்யூப் மியா ரஸூல் கூறுகையில், சம்பவம் நிகழ்வதற்கு முந்தைய தினம், மசாலப்பொடி வாங்க தயாபாய் வனபாய் என்ற நபரின் கடைக்கு சென்ற, தனது மாமாவிடம், இது இவருடைய கடைசி பஜ்ஜியை தின்பதற்கான மசாலா, என கடை உரிமையாளர் இன்னொரு நபரிடம் கூறியதாக தெரிவித்தார்.
இனப்படுகொலை சம்பவம் நடப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு, முஸ்லிம்களுக்கு எதிரான என்ன செய்தாலும் யாரும் தண்டிக்கப்படமாட்டார்கள்.
நமது அரசு அவர்களை காப்பாற்றும் என, நரன் லாலு பட்டேல் என்ற உள்ளூர் எம்.எல்.ஏ, கூறியதாக ஸர்தார்புரா கூட்டுப் படுகொலையில் தனது மூன்று குடும்ப உறுப்பினர்களை இழந்த, நாஸிர் அக்பர் ஷேக் பின்னர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.
கலவரத்திற்கு முன்னோடியாக, சங்க்பரிவார தீவிரவாதிகள் முஸ்லிம்கள் நெருக்கமாக வசித்த, ஷேக் முஹல்லாவில் ஹாலோஜன் விளக்குகளை நிறுவிய பொழுது, இது எதற்கு? என வினவிய பொழுது “முஸ்லிம்களை கொலைச் செய்ய” என பதிலளித்ததாக, பிக்குமியா ஷேக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த தகவலை போலீசாருக்கு தெரிவித்த போதிலும், அதனை செவிக்கொடுத்து கேட்க போலீஸ் தயாராகவில்லை.
துவக்கத்தில் இவ்வழக்கை விசாரித்த போலீஸ், உள்ளூர் பிரமுகர்கள் பலரையும் தவிர்த்துவிட்டு, முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) தயார் செய்தனர் என குற்றச்சாட்டு முன்னரே எழுந்தது.
ஸர்தார்புரா கூட்டுப் படுகொலைக்கு தலைமை வகித்த, முன்னாள் பா.ஜ.க அமைச்சர், நரன் லாலு பட்டேல் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் ஒருவராவார்.
துவக்கத்தில் இவ்வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக பணியாற்றியவர் வி.ஹெச்.பியின் குஜராத் மாநில செயலாளரான திலீப் திரிவேதி ஆவார்.
குற்றவாளிகளின் ஜாமீன் மனுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய இவர், ஜாமீனுக்கு ஆதரவான முடிவை மேற்கொண்டு, குற்றவாளிகள் தப்பிப்பதற்கு உதவினார்.
உச்சநீதிமன்றம் தலையிட்டதைத் தொடர்ந்து, அரசு தரப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து திலீப் திரிவேதி நீக்கப்பட்டார்.
தீபக் ஸ்வரூப் (1977பாட்ச்):-

2002-ஆம் ஆண்டு வதோதரா ரேஞ்ச் ஆபீஸர்.
வதோதரா ரூரல், கோத்ரா, தாஹோத், நர்மதா ஆகிய மாவட்டங்கள் இவருடைய அதிகார வரம்பிற்குள் இருந்தன.
இவையெல்லாம் இனப்படுகொலையின் வேளையில், முஸ்லிம்களை ஹிந்துத்துவா பயங்கரவாதிகள், கூட்டுப் படுகொலைச் செய்த இடங்களாகும்.
2005-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வதோதரா நகர போலீஸ் கமிஷனராக பதவியேற்றார். பெஸ்ட் பேக்கரி கூட்டுப்படுகொலையில் இவருக்கு நேரடி தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
வழக்கிலிருந்து கஷ்டப்பட்டு தப்பினார்.
பின்னர், சூரத் போலீஸ் கமிஷனராக பதவி வகித்தார்.
தற்பொழுது, 13 ஆம் பட்டாலியனின் கூடுதல் டி.ஜி.பி பதவி வகிக்கிறார்........
எ.கெ.பார்கவா(1967பாட்ச்) :-
2002-ஆம் ஆண்டு கலவர வழக்குகளை மீளாய்வு செய்து, தள்ளுபடிச் செய்ய முயற்சி மேற்கொண்டார்.
2004 பிப்ரவரியில் குஜராத் மாநில டி.ஜி.பி. பதவி வழங்கப்பட்டது.
ஜி.சி.ராய்கார் (1972பாட்ச்):-
இனப்படுகொலை நடந்த2002 பிப்ரவரிக்கும் மார்ச்சுக்கும் இடையே, குஜராத் உளவுத்துறையின் கூடுதல் டி.ஜி.பி., ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு உதவுவதற்காக, அரசு நடத்திய ரகசிய கூட்டங்களில் பங்கேற்றார்.
இந்த கூட்டங்களின் மினிட்ஸ்(நிகழ்ச்சி நிரல் பதிவேடு)காணாமல் போயின.
ஓய்வு பெற்ற பிறகு, பல பதவிகளும் வழங்கப்பட்டன.
எம்.கே.ராண்டன் (1976பாட்ச்):-
இனப்படுகொலை நடக்கும் வேளையில், அஹ்மதாபாத் மாநகர போலீஸ் துணை கமிஷனர்.
குல்பர்க் சொச்சைட்டியிலும், நரோடா பாட்டியாவிலும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கூட்டுப் படுகொலையும், பாலியல் வன்புணர்வு நடத்துவதற்கு வசதிகளை செய்துக் கொடுத்தார்.
பின்னர் சூரத் ஐ.ஜியாக இட மாற்றம்.
2005 ஜூலை மாதம் காந்திநகர் கூடுதல் டி.ஜி.பியாக பதவி உயர்வு.

No comments:

Post a Comment