கொலம்பசையும் ,மார்கோ போலவையும் தெரிந்த பலருக்கு இந்த பெயர் தெரியுமா என்பது சந்தேகத்திற்குரியதே.ஆனால் இவரின் சாதனைகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
இவர் தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை பிரயங்களிலேயே செலவிட்டவர்.
1304 ஆம் ஆண்டு மொரோக்காவில் பிறந்தவர் தான் இப்னு பதுதா இவரது இயற்பெயர்
ஹாஜி அபு அப்துல்லாஹ் முஹம்மது இப்னு பதுதா என்பதாகும்.இவரின் பயணக்
குறிப்புக்கள் "rihla" என்ற என்ற நூலில் இவர் எங்கெல்லாம் பயணம் செய்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.தன்னுடைய பயணத்தில் வட ஆப்ரிக்கா முதல் மேற்கு ஆப்ரிக்கா ,
தெற்கு ஐரோப்பா ,கிழக்கு ஐரோப்பா ,மத்திய கிழக்கு நாடுகள் ,இந்தியா துணைகண்டம் ,
மத்திய ஆசியா, தெற்கு ஆசியா ,சீனா என கிட்டத்தட்ட 121000 கிலோமீட்டர் அதாவது 75000
மயில்கள் பயணம் செய்துள்ளார் அதுவும் எந்தவிதமாக வகான வசதிகளும் இல்லாத அந்த
நாளிலும் கூட குதிரை மற்றும் கப்பல் மூலமாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார்.
தன்னுடைய இளம் வயதில் மார்க்க கல்வியை முடித்த இவர் 1325 ஆம் ஆண்டு தன்னுடை
தன்னுடைய இளம் வயதில் மார்க்க கல்வியை முடித்த இவர் 1325 ஆம் ஆண்டு தன்னுடை
21 ஆம் வயதில் மக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொள்ள தீர்மானித்தார்.மக்காவிற்கு
செல் வது என்பது இப்பொழுது நாம் செல்வதை போல விமான வசதிகள் எல்லாம் கிடையாது.
மொரோக்காவில் இருந்து மக்கா செல்லவேண்டும் என்றால் அந்த கால கட்டத்தில் கிட்டத்தட்ட
பதினாறு மாதங்கள் ஆகும்.ஆனால் இப்னு பதுதா தான் மக்கா சென்று தனது நாடான
மொரோக்கவிர்க்கு திரும்ப கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் ஆகியது.உலகின் இஸ்லாமிய
ஆட்சி எங்கெல்லாம் இருந்ததோ மேலும் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற இப்னு
பதுதா 1348 ஆம் ஆண்டு தனது முதல் நீண்ட ஹஜ் பயணத்தை முடித்து சிரியா வந்து சேர்ந்தா
ர் அப்பொழுது தான் அவருக்கு தெரியும் தனது தந்தை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே
இறந்தது.இந்த சோகத்தின் காரணமாக தனது நாடான மொரோகவிர்க்கு திரும்ப தீர்மானித்தார்.
சிரியாவிலிருந்த ு பாலஸ்தீனம் வழியாக கிட்டத்தட்ட ஒரு வருட பயணத்திற்கு பின்னர்
மொரோக்கோ வந்து சேர்ந்தார்.தந்தை இறந்த சோகத்தில் இருந்த இப்னு பதுதாவிர்க்கு
மேலும் ஒரு அதிர்சியாக மொரோக்கோ வந்து சேருவதற்கு ஆறு மதத்திற்கு முன்பே தனது
தாயும் இறந்த செய்தி மேலும் அதிர்சியை உண்டாக்கியது.சில நாட்கள் தனது சொந்த ஊரான
தன்ஜிரில் தங்கி இருந்த இப்ன் பதுதா பின்னர் தனது பயணத்தை ஸ்பைனில் இஸ்லாமிய
ஆட்சியை நடத்திக் கொண்டிருந்த மூர் வம்சத்தின் அல் அந்தலூஸ் அல்ஹம்ரா உள்ளிட்ட
அனைத்து பகுதிகளையும் தனது பயணத்தை தொடர்ந்தார்.இப்படியே கிட்டத்தட்ட தனது
வாழ்நாளின் பெரும்பகுதியை பயணத்தில் செலவழித்த இபின் பதுதா 1368 ஆம் ஆண்டு
மரணமடைந்தார்.
வரலாற்றில் பல தியாகங்களை செய்த சமூகம் இஸ்லாமிய சமூகம் ஆனால் இன்று
வரலாற்றில் பல தியாகங்களை செய்த சமூகம் இஸ்லாமிய சமூகம் ஆனால் இன்று
நமது வரலாறே நமக்கு தெரிவதில்லை.மருத்துவம் புவியியல் கணிதவியல் அறிவியல்
இன்னும் எத்தனையோ தளங்களில் கண்டுபிடிப்புகளை நிகழ்திய இஸ்லாமிய சமூகத்தின்
நிலை மிக வருத்தத்திர்க்குரியதாகவே உள்ளது.ஐரோப்பா உலகின் இருண்ட கண்டம் என
அழைக்கப்பட்ட அந்நாளில் உலகிற்கு அறிவியல் கண்டுபிடிப்புகள் உருவாக்கியவர்கள்
முஸ்லிம்கள்.பல நூறு ஆண்டுகள் முஸ்லிம்களின் கண்டுபிடிப்புக்களுக்கு பின்னர்
தான் ஐரோப்பியர்கள் அறியவிலில் கால் பதித்தனர் என்பது வரலாற்று உண்மை.
வரலாற்றை மறந்த சமூகம் நிட்சயம் வாரலாற்றை படைக்க முடியாது.நாம்
வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டியது பல உள்ளன.
No comments:
Post a Comment