ஹைதராபாத்:முஸ்லிம்களின் புனித பண்டிகையான ஈத்-அல்-அஃதா அன்று, ஹிந்து வாஹினி ஆர்வலர்கள் சிலர் முஸ்லிம் இளைஞர்களை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டதை தொடர்ந்து முந்நூற்றுக்கும் மேற்ப்பட்ட பி.ஜே.பி தொண்டர்கள், ஹிந்து வாஹினி மற்றும் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷாத்தை சேர்ந்தவர்கள் பஷீர்பாகில் உள்ள கமிஷனர் அலுவலகத்தை தாக்க சேதப்படுத்தினர்.
குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்த நிலையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கான் வலதுசாரி ஹிந்து குழு மீது பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
பி.ஜே.பி எம்.எல்.ஏ மற்றும் மாநில தலைவர் ஜி.கிருஷ்ணா ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாறு டாட்டடிரேயா, முன்னாள் எம்.எல்.ஏ பாண்டம் பால் ரெட்டி, இந்திரேசன் ரெட்டி மற்றும் நகர தலைவர் பி.வெங்கட் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment