Sunday, December 11, 2011

கைப்பற்றிய அமெரிக்க விமானத்தினை உலகிற்கு காட்டியது ஈரான் (காணொளி இணைப்பு)



அமெரிக்க உளவு விமானமொன்றினை சுட்டு வீழ்த்தியதாகவும் பின்னர் அதனைக் கைப்பற்றியதாகவும் ஈரான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.
இந்நிலையில் ஈரான் கைப்பற்றிய அதி நவீன உளவு விமானத்தின் காணொளியை அந்நாட்டு தொலைக்காட்சிச் சேவையொன்று ஒளிபரப்பியுள்ளது.
அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட நவீன ஆர்.கியூ- 170 என்ற விமானமே இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை உளவு பார்க்கும் நடவடிக்கையில் மேற்படி விமானங்களே ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
அக் காணொளியில் அந்நாட்டு அதிகாரிகள் இருவர் அருகில் இருந்து விமானத்தினை ஆராய்வது போலவும் அக் காணொளியில் சித்திரிக்கப்பட்டுள்ளது.
மேலும் விமானத்தில் “அமெரிக்காவினால் ஒன்றும் செய்ய முடியாது” என்ற ஈரானிய முன்னாள் தலைவர் அயத்துல்லா ருஹொல்லா கொமேனியின் வாசகம் எழுதப்பட்ட பெனர் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
ஈரான் இதனை எவ்வாறு சுட்டு வீழ்த்தியது என்பது தொடர்பில் சர்ச்சை நிலவுகின்றது. காரணம் பொதுவாக இத்தகைய ஆளில்லா உளவு விமானங்கள் எதாவது தொழிநுட்ப கோளாறு அல்லது தாக்குதலுக்குள்ளாகும் வேளையில் தமது நிலைக்குத் திரும்பவோ அல்லது தானாகவே அழித்துக்கொள்ளும் படியே தயாரிக்கப்படுகின்றன.
எனினும் ஈரான் இதனைக் கைப்பற்றியுள்ளமையானது பலரை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment