Monday, September 26, 2011

maruppu news


செய்திகளும்உண்மைகளும்
பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்: இந்து முன்னணி வன்முறை - 12 பேர் கைது
சென்னை, செப் 25-
சென்னை விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் தெருவில், பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், நேற்றிரவு நடைபெற்றது.
இதில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மற்றும் தி.க. தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும், அப்பகுதியை சேர்ந்த இந்து அமைப்பினர், சுமார் 40 பேர் கூட்டத்தை நடத்த விடாமல், கற்களை மேடை மீது வீசி ரகளை செய்தனர்.
இதையடுத்து, விருகம்பாக்கம் போலீசார் அவர்களை எச்சரித்து வெளியேற்றினர்.
பின்னர் வீரமணி பேச்சை தொடங்கியபோது, சிலர் கோஷம் போட்டனர்.
திடீரென இந்து அமைப்பினர் அவர் மீது கற்களை வீசினர், ஆனால் அது அவர்மீது விழவில்லை.
உடனே தி.க தொண்டர்கள் திரண்டு வந்து, கற்களை வீசிய இந்து அமைப்பினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற திராவிடர் கழக தொண்டர்களுக்கும், இந்து முன்னணியினருக்கும் மோதல் ஏற்பட்டது.
இதில் அங்கு கட்டப்பட்டிருந்த மின்விளக்குகள் அடித்து நொறுக்கப்பட்டன.இரு தரப்பிலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.


இதில் இந்து முன்னணியைச் சேர்ந்த இளங்கோ (38), செந்தில்குமார் (29), செந்தில் (30), விட்டல் (34), தயாளன் (46), நாகேஷ்வரன் (48), மனோகரன் (42) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல, திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சாக்ரடீஸ் (35), ஏழுமலை (45), நடராஜன் (37), பரசுராமன் (28) உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆர்.எஸ்.எஸ். வன்முறைக்கு திராவிடர் கழகத்தினரை கைது செய்வதா?
விருகம்பாக்கத்தில் நேற்று (24.9.2011) மாலை நடைபெற்ற, தந்தை பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். காலிகள் மேற்கொண்ட வன்முறை குறித்தும், காவல் துறையினர் நடந்துகொண்ட போக்கு குறித்தும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங் குன்றன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தந்தை பெரியார் அவர்களின் 133 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - சென்னை விருகம்பாக்கத்தில் , உரிய காவல் துறை அனுமதி பெற்று நேற்று மாலை (24.9.2011) சிறப்பாக நடைபெற்றது.
கழகத் தோழர்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், பொது மக்கள் உள்பட ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
பேராசிரியர் திரு. சுப.வீரபாண்டியன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தை நோக்கி கற்கள் வந்து விழுந்தன.
கழகத் தோழர்களும், பொதுமக்களும் பதற்றம் அடைந்தனர்.
ஒரு கும்பல் கையில் கற்களோடும், கம்புகளோடும், உடைந்த டியூப்லைட்டுகளிலும் மேடையை நோக்கி வந்து கொண் டிருந்தது.
கம்புகளையும் உடைந்த டியூப்லைட்டுகளையும் கற்களையும் மேடையை நோக்கி வீசினர்.
அவர்கள் 54 டியூப்லைட்டுகளையும், நாற்காலிகளையும் உடைத்துக் கொண்டேயிருந்தனர்.
இவ்வளவும் காவல்துறையினர் முன்தான் நடந்து கொண்டிருந்தது.
காவல்துறையோ, செயலற்று வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தது.
கடைசியில் திராவிடர் கழகத் தோழர்கள் 5 பேரையும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சிலரையும் காவல் துறை கைது செய்தனர்.
அடித்தவர்களையும், அடிபட்டவர் களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது, காவல் துறையினரின் கடமை உணர்ச்சிக்கு உகந்தது தானா?

No comments:

Post a Comment