14 Dec 2011
புதுடெல்லி:மோடி அரசால் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் ஷர்மாவுக்கு கடந்த செவ்வாயன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்பளித்தது. மேலும் அவர் ஜாமீன் தொகையாக 5 லட்சம் ரூபாயையும் அவருக்கு மூன்று நபர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் பிரதீப் ஷர்மா பிணையை தவறாக பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மாநில அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
பிரதீப் ஷர்மா தனியார் நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாகக் கூறி மோடி அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரதீப் ஷர்மா தனது மனுவில் தனது இளைய சகோதரன் குல்தீப் மோடி அரசுக்கு எதிராக செயல்பட்டதால் தன் மீது போலியாக குற்றம் சுமத்தி மோடி அரசு கைது செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
பிரதீப் ஷர்மாவின் இளைய சகோதரன் குல்தீப் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். இவர் 2002 குஜராத் கலவரம் தொடர்பான பல உண்மைகளை மோடி அரசுக்கு எதிராக வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதீப் ஷர்மாவை உச்சநீதிமன்றம் பிணையில் விடுவித்தது மோடி அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குஜாராத் உயர்நீதி மன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்ததால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
No comments:
Post a Comment