Wednesday, December 28, 2011

கட்டாரில் தலிபான் போராளிகளுக்கு அலுவலகம்..?


ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாய், கட்டாரில் தலிபான் இணைப்பு செயலகமொன்றினைத் திறப்பதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார். இதனூடாக சமாதான செயற்பாடுகளை வலுப்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தலிபான் இணைப்பு செயலகத்தினை அமைக்கும் அமெரிக்காவின் திட்டத்திற்கு ஆப்கான் ஜனாதிபதி முதற்தடவையாக பகிரங்கமாக ஆதரவு வெளியிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் ஜேர்மனியுடன் ஆத்திரமுற்றிருந்த ஹமீட் கர்சாய் இதற்குமுன்னர் இந்தத் திட்டத்தினை நிராகரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டம் தொடர்பில் தலிபான்கள் இதுவரையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நன்றி - யாழ் முஸ்லிம் 

No comments:

Post a Comment