Saturday, December 10, 2011

இஸ்லாமிய நல்லெண்ணத் தூதுவராக பிரிட்டன் குத்துச்சண்டை வீரர் அமீர்கான்


சனிக்கிழமை, 10 டிசம்பர் 2011 17:40
வாசிப்புக்கள்: 167
பகுதி: செய்திகள் - 
உலக செய்திகள்

  • PDF
Amir-Khanபிரிட்டனின் இளவயது குத்துச்சண்டை வீரரான பாகிஸ்தானிய பாரம்பரியத்தைக் கொண்ட அமீரகான், இஸ்லாமிய நல்லெண்ணத் தூதுவராக செயற்படவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குலகில் இஸ்லாம் விரோத கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப்பட்டுவரும் நிலையில், இவ்வாறான நியமனங்கள் சாதகமான அபிப்பிராயத்தை ஏற்படுத்த உதவும் என இத்திட்டத்தை முன்னெடுக்கும் அமெரிக்க நிறுவனப் பிரதிநிதி ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
அமீர்கான் மக்களையும் நாடுகளையும் இணைப்பதில் உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் 2009 ஜூலை 18 இல் இடம்பெற்ற மென்பார குத்துச்சண்டை போட்டியில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டார். நஸீம் ஹமீத், ஹேர்பி ஹைட் ஆகியோருக்குப் பிறகு உலக சம்பியன் பட்டத்தை வென்ற மூன்றாவது - வயதில் குறைந்த - பிரிட்டன் பிரஜை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் றமழான் மாதம் முஸ்லிம் விளையாட்டு வீரர்களுக்கென, அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு இப்தார் நிகழ்வில் கானும் கலந்து கொண்டிருந்தார்.
‘‘உலகில் இத்தனை முஸ்லிம் நட்சத்திர விளையாட்டு வீரர்கள் உள்ளனர் என்பதை அறியும்போது, அது பெரும் கௌரவமாக உள்ளது‘‘ என இதில் கலந்து கொண்டு அவர் தெரிவித்திருந்தார்.
‘‘நற்செய்திகளை முன்வைப்பதற்கு இவை நல்ல சந்தர்ப்பங்கள். நாங்கள் யார் என்பதை அறியவும் எம்மை மதிக்கவும் இது உதவும். எனது மார்க்கத்தைப் பற்றி பேசுவதற்கு எனக்கு ஒருபோதும் வெட்கமோ தயக்கமோ இல்லை‘‘ எனவும் அமீர்கான் மேலும் கூறியுள்ளார்.
நன்றி http://meelparvai.net

No comments:

Post a Comment