21 Dec 2011
வாஷிங்டன்:தாலிபான் அமெரிக்காவின் எதிரி அல்ல என அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். நியூஸ் வீக் இதழுக்கு பேட்டி அளித்துள்ள ஜோ பைடன், அமெரிக்காவின் பிரகடனப்படுத்தப்பட்ட தாலிபான் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து அமெரிக்கா பின்வாங்குவதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
தனது பேட்டியில் பைடன் கூறியதாவது: ‘அமெரிக்காவின் விருப்பங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற காரணத்திற்காக கொள்கை விளக்க அறிவிப்புகளில் ஒரு போதும் தாலிபானை அமெரிக்காவின் அதிபர் பாரக் ஒபாமா அமெரிக்காவின் எதிரியாக குறிப்பிடவில்லை. அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் ஆப்கானில் தற்போதைய அரசை கவிழ்க்க முயலும் வேளையில் இயல்பாகவே உருவாகும் எதிர்ப்பு மட்டுமே தாலிபான் மீது உள்ளது. இதன் பின்னணியில் இரு தந்திரங்கள் உள்ளன.
ஒன்று-அல்காயிதாவை அழித்தொழிக்க முயல்வது, இரண்டு-ஆப்கான் அரசை தாலிபானுடன் பேச்சுவார்த்தையின் பாதையில் செல்ல
வலுப்படுத்துதல். அல்காயிதாவுடன் இருக்கும் தொடர்பை முறித்துக்கொண்டு நல்லிணக்க வழியில் தாலிபானை கொண்டுவருவதும் அமெரிக்காவின் நோக்கமாகும். இவ்வாறு பைடன் கூறினார்.
வலுப்படுத்துதல். அல்காயிதாவுடன் இருக்கும் தொடர்பை முறித்துக்கொண்டு நல்லிணக்க வழியில் தாலிபானை கொண்டுவருவதும் அமெரிக்காவின் நோக்கமாகும். இவ்வாறு பைடன் கூறினார்.
பைடனின் கருத்திற்கு வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜோ கார்ணி ஆதரவு தெரிவித்துள்ளார். தாலிபான் ஆப்கானில் ஆட்சியில் இருந்ததால் அமெரிக்கா ஆப்கானை தாக்கவில்லை என கூறிய கார்ணி, அல்காயிதா ஆப்கானில் இருந்ததால் தாக்கியதாக குறிப்பிட்டார். தாலிபான் நடத்திவரும் எதிர்ப்பு போராட்டம் அமெரிக்காவின் விருப்பங்களுக்கு சவாலை ஏற்படுத்தி வருவது குறித்து அமெரிக்கா விழிப்புணர்வு பெற்றதுதான் தாலிபான் ஆதரவு கருத்துக்களை தெரிவிப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது.
முன்னர் தாலிபானுடன் நல்லிணக்க பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முயன்றதாக செய்தி வெளியானது.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment