காபூல்:2011 -ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தானில் 565 வெளிநாட்டு ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக அறிக்கை வெளியாகி உள்ளது. சுதந்திர இணையதளம் ஒன்றை மேற்கோள்காட்டி ப்ரஸ் டி.வி இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
2001-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பை துவக்கிய பிறகு நேட்டோ சந்திக்கும் இரண்டாவது பெரிய இழப்பாகும். 565 ராணுவத்தினரில் 417 பேர் அமெரிக்கர்கள் ஆவர். 45 பேர் பிரிட்டனைச் சார்ந்தவர்கள்.
ஆஸ்திரேலியாவின் 32 ராணுவ வீரர்களும் 2011-ல் கொல்லப்பட்டனர். பத்தாண்டுகள் நீண்ட ஆஃப்கான் ஆக்கிரமிப்பில் மொத்தம் கொல்லப்பட்ட நேட்டோ ராணுவத்தினரின் எண்ணிக்கை 2846 என அந்த அறிக்கை கூறுகிறது. மோதல் தீவிரமடைந்த 2010-ஆம் ஆண்டு நேட்டோ ராணுவத்தினருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது.
2010-இல் 711 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அதேவேளையில் ஆப்கானில் முந்தைய ஆண்டை விட அப்பாவி மக்கள் கொல்லப்படுவது 2011-ல் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது. நேற்று முன் தினம் நடந்த கண்ணி குண்டுவெடிப்பில் இரண்டு நேட்டோ ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment