பெய்ஜிங்:சீனாவின் வடமேற்கு பகுதியில் காவல்துறையினர் மஸ்ஜிதை இடிக்க முனைந்ததால் சீன முஸ்லிம்கள் போலீசாருடன் சண்டையிட்டதாக சீன காவலதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளியன்று நிங்சியா பகுதியில் ஹெக்சி எனும் நகரில் உள்ள மஸ்ஜிதை சட்ட விரோதமான இடம் என கூறி சீன போலீசார் இடிக்க முயன்றபோது அப்பகுதி முஸ்லிம்கள் அதனை தடுத்துள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மஸ்ஜித் முற்றிலுமாக இடிக்கப்பட்டது.
மேலும் இந்த போராட்டத்தில் இருவர் உயிரிழந்து இருக்கக்கூடும் என்று ஹாங்காங் மனிதஉரிமை அமைப்பு அறிவித்துள்ளது.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment