லண்டன்:பிரிட்டிஷை சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இறைச்சியை ஹலால் முறையில் அறுத்து உண்ண வேண்டும் என்பது தங்களால் முடியாது, ஏனெனில் அந்த முறை எங்களுடைய மற்றைய முஸ்லிம் அல்லாத நண்பர்களை துன்புறுத்தும் வண்ணமாக உள்ளது என்று ஊடங்களில் வெளியான செய்தி அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் வெளியாகும் டெய்லி மெயில் தன்னுடைய பத்திரிகையில் வெஸ்ட் மினிஸ்டர் அரசு மாளிகையை மேற்கோள் காட்டி இச்செய்தியை வெளியிட்டுள்ளது. வெஸ்ட் மினிஸ்டர் அரசு மாளிகையின் 23 உணவகங்களில் ஹலால் உணவை பரிமாற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து விட்டது.
இவ்வறிக்கை பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறிப்பாக முஸ்லீம் எம்.பிக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. லார்ட் அஹ்மத் இது குறித்து கூறும் போது “ஹலால் உணவை உண்ணாவதவர்களுக்கு வாய்ப்பிருப்பது போல் ஹலால் உணவு விரும்புவோர்க்கும் ஒரு வாய்ப்பு இருக்க வேண்டும்” என்றார்.
இங்கிலாந்து சர்ச்சின் உறுப்பினர் அலிசான் ரூப்போ “மற்ற உணவகங்களில் ஹலால் உணவை பரிமாற அனுமதிக்கும் பாராளுமன்றம் தன் வளாகத்தில் பரிமாற தடை விதிப்பது இரட்டை நிலைப்பாடாக உள்ளது” என்றார்.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment