Thursday, December 22, 2011

சி.ஐ.ஏ. உளவாளியை விடுவியுங்கள் - ஈரானிடம் கெஞ்சுகிறது அமெரிக்கா



ஈரானில் கைதான அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏவின் ஏஜண்டை விடுதலைச் செய்யவேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலாண்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

டிசம்பர் 17-ஆம் தேதி டெஹ்ரானில் அமீர் மிர்ஸாஇ ஹிக்மதி என்ற அமெரிக்க உளவாளியை அதிகாரிகள் கைது செய்தனர். தான் சி.ஐ.ஏ உளவாளி என்பதை ஹிக்மதி ஒப்புக்கொண்டார். ஹிக்மதியின் குற்ற ஒப்புதல் தொடர்பான வீடியோ காட்சிகளை நேற்று முன் தினம் ஈரானின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி வெளியிட்டது.

ஹிக்மதியை சுவிட்சர்லாந்து தூதரகம் மூலமாக ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. 2001-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்த ஹிக்மதி அமெரிக்காவிலும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தளமான பக்ராமிலும் பயிற்சி பெற்ற பிறகு டெஹ்ரானுக்கு வந்துள்ளார். அமெரிக்க ராணுவத்தில் ஹிக்மதி அரபு மொழிப் பெயர்ப்பாளராக பணியாற்றியுள்ளார். இவருடைய குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. தென்மேற்கு அமெரிக்காவின் அரிஸோனாவில் பிறந்தவர் ஹிக்மதி.

No comments:

Post a Comment