புதன்கிழமை, 07 டிசம்பர் 2011 02:43 வாசிப்புக்கள்: 166 பகுதி: செய்திகள் - உலக செய்திகள்
அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகள் முஸ்லிம் ஒருவரை ஜனாதிபதியாக்கினால், நாம் எகிப்தில் உள்ள கிப்திய கிறிஸ்தவர் ஒருவரை ஜனாதிபதியாக்குவோம் என ஸலபி தலைவர்களுள் ஒருவரான யாஸர் புர்ஹாமி தெரிவித்துள்ளார்.
இந்த பதவிக்கு போட்டியிடும் உரிமை கிப்தியர்களுக்கு இல்லை என, அத்-தஃவா அஸ்-ஸலபிய்யா குழுவின் தலைவரான யாஸர் மேலும் தெரிவித்துள்ளார்.
எகிப்தில் மூன்று கட்டமாக இடம்பெறும் பாராளுமன்றத் தேர்தலின் முதற் கட்டத்தில், ஸலபி சிந்தனைப் போக்குள்ள அந்நூர் கட்சியும் அதன் கூட்டணியும இணைந்து அண்ணளவாக 25 வீத வாக்குகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஹ்வான்கள் தலைமையிலான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியும் அதன் கூட்டணியும் முதற் கட்டத் தேர்தலில் முதன்மை ஸ்தானத்தைக் கைப்பற்றியுள்ளன. ஸலபி கூட்டணி இதற்கு அடுத்து, இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளது.
No comments:
Post a Comment