Monday, December 26, 2011

நேட்டோவின் இரவுநேர சோதனை மற்றும் தாக்குதலை நிறுத்தவேண்டும் – ஹமீத் கர்சாய்

images
காபூல்:ஆஃப்கனில் நேட்டோ தலைமையில் நடத்தப்படும் இரவு நேர சோதனை நடவடிக்கை மற்றும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் என்று ஆஃப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் தெரிவிததுள்ளார்.
மேலும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபமாக கிழக்கு பகிதா மாகாணத்தின் தலைமை இடமான கர்தேஜ் நகரத்தில் நடந்த நேட்டோவின் இரவு நேர சோதனைமற்றும் தாக்குதலில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதோடு நான்கு பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஐ.நா அறிக்கையின் படி இந்த வருடத்தின்  அரை வருடத்திற்குள்  இதுவரை 1462 ஆஃப்கன் குடி மக்கள் மரணம் அடைந்துள்ளனர் என்ற அறிக்கையை கடந்த ஜூலை மாதம் காபூலில் வெளியிடப்பட்டது.

 நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment