Sunday, December 4, 2011

எகிப்தில் தேர்தல் - இஹ்வானுல் முஸ்லிம்கள் வெற்றிபெறும் வாய்ப்பு


எகிப்து பாராளுமன்றத்திற்கான தேர்தல் சென்ற‌ நவம்பர் 21-ம் தேதி நடைபெற்றது.  பல ஆண்டுகளாக சர்வதிகார ஆட்சி செய்து கொண்டிருந்த ஹோஸ்னி முபாரக்கின் அரசை எதிர்த்து அந்நாட்டில் மாபெரும் புரட்சி ஏற்பட்டது. இதன் பிறகு ஹோஸ்னி முபாரக் பதவி விலகினார்.
 தற்போது ராணுவத்தின் இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது.  இந்நிலையில் எகிப்து பாராளுமன்றத்தின் கீழ்சபைக்கு  நவம்பர் 21- ம் தேதி, நடைபெற்றது. அதே போன்று மேல் சபைக்கு (ஷுரா கவுன்சில்) 2012-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி துவங்கி மார்ச் 4-ம் தேதி முடிவடைய உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பினை ராணுவ இடைக்கால கவுன்சில் செப்.26-ம் தேதி வெளியிட்டார்.

அதேவேளை நீதியான தேர்தலொன்று நடைபெறும் பட்சத்தில் புரட்சிக்கு காரணமாக இஹ்வானுல் முஸ்லிமின் எனப்படும்  முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உருவாகுமென அரசியல் ஆய்வாளர்கள் கருத்து கூறி இருந்தனர். 

அதனை மெய்பிக்கும் முகமாக இஃக்வானுல் முஸ்லிமீன் இயக்கம் முதல் கட்ட தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இஃக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அரசியல் கட்சியான ஃப்ரீடம் ஜஸ்டிஸ் பார்டி (சுதந்திர நீதிக்கட்சி) 45% சதவிகித வாக்குகளை முதல் கட்ட தேர்தலில் பெற்றுள்ளது.

இமாம் ஹஸனுல் பன்னா அவர்களின் புரட்சியால் இஃக்வானுல் முஸ்லிமீன் (முஸ்லிம் சகோதரர்கள்) என்ற மாபெரும் இயக்கம் உருவானது. அந்நிய நாட்டவர்களுக்கு தமது தேசத்தை அடிமைப்படுத்த நினைக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடியதால் இமாம் ஹஸனுல் பன்னா அவர்களை ஷஹீதாக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் ஏற்படுத்திய அந்த சகோதரத்துவ புரட்சி உலகம் முழுவதும் பரவியது. மேற்கத்திய நாடுகளாலும், எகிஃப்தில் சர்வதிகார ஆட்சி செய்து வந்த ஹோஸ்னி முபாரக்கின் அரசாலும் "இஃவானுல் முஸ்லிமீன்" இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது.

சமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்த இஃக்வானுல் முஸ்லிமீன் இயக்கம் தற்போது எகிஃப்து அரசியல் வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment