Thursday, December 8, 2011

சு.சுவாமி-க்கு புகழ்வாய்ந்​த ஹார்வேர்ட் பல்கலைகழகம் தனது கதவுகளை மூடியது

su.samy
வாஷிங்டன்:கடந்த ஜூலை மாதம் சு.சாமி இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் சில இணைய தளங்களில் மததுவேசத்தை -மதக் கலவரத்தை  தூண்டும் வகையில் எழுதிய ஒரு கட்டுரையில், இந்தியாவில் உள்ள மசூதிகளை இடிக்க வேண்டும், தங்களது மூதாதையர்கள் இந்துக்கள் என்பதை ஏற்கும் முஸ்லீம்களுக்கு மட்டுமே இந்தியாவில் ஓட்டு போட உரிமை தர வேண்டும் என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கு நாடு முழுவதுமே கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதற்கு முஸ்லிம்களும் – மனித உரிமை ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர். மதத்துவேசம் தூண்டும் சு.சுவாமியை ஹார்வேட் பல்கலைகழகத்துக்குள் நுழைய விடக்கூடாது என்று முஸ்லிம் மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்தனர்.
துவக்கத்தில் பேச்சு சுதந்திரத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று சு.சுவாமிக்கு வக்காலத்து வாங்கிய பல்கலைகழக நிர்வாகம், பேச்சு சுதந்திரம் என்ற முகமூடியுடன் முஸ்லிகளுக்கெதிரான வெறுப்பை தூண்டும் பேச்சை அனுமதிப்பது தவறு என்று உணர்ந்தது. சு.சுவாமியை பேராசிரியராக நீடிக்க அனுமதிப்பது தொடர்பான ஓட்டெடுப்பில் பெரும்பான்மை ஹார்வேட் பல்கலைகழக பேராசிரியர்கள் அனுமதிக்க கூடாது என்று வாக்களித்தனர்.
‘Quantitative Methods in Economics and Business’ மற்றும் ‘Economic Development in India and East Asia’ ஆகிய தலைப்புகளில்  கோடை விடுமுறை கால பாடம் எடுப்பார் சு.சாமி.

No comments:

Post a Comment