காஸ்ஸா:காஸ்ஸாவிலும், மேற்கு கரையிலும் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தொடரவே நேற்று மேலும் ஒரு ஃபலஸ்தீன் இளைஞர் கொல்லப்பட்டுள்ளார்.
மேற்கு கரையில் இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்பு நிர்மாணத்திற்கு எதிராக நடத்தப்பட்ட பேரணியில் கலந்துகொண்ட முஸ்தஃபா அப்துல் ரஸ்ஸாக் அல் தமீமி மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கியால் சுட்டது. இத்தாக்குதலில் காயமடைந்த அவர் நேற்று மரணமடைந்தார். இதனை எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற இஸ்ரேலிய மனித உரிமை ஆர்வலர் ஜோனதன் பொல்லாக் கூறியுள்ளார்.
தமீமியின் அருகிலிருந்து இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கியால் சுட்டதில் அவரது முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதித்த பிறகும் சிகிட்சை பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார்.
இதற்கிடையே வடக்கு காஸ்ஸாவில் இஸ்ரேல் நேற்றும் வான்வழி தாக்குதலை தொடர்ந்தது. இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடந்ததாக குற்றம் சாட்டி இத்தாக்குதல் நடந்துள்ளது.
No comments:
Post a Comment