தலிபான்கள் கத்தாரில் அலுவலகம் ஒன்றைத் திறந்து வெளிநாடுகளுடன் பே்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக அறிவித்ததை அடுத்தே (அதைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்) இப்படி ஒரு முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
தலிபான்கள் அலுவலகம் அமைக்கும் செய்தி வெளியானவுடன், அமெரிக்கா கிரீன் சிக்னல் கொடுத்த பின்னரே இப்படியொரு ஏற்பாடு நடைபெற்றிருக்கலாம் என்று நேற்று விறுவிறுப்பு.காமில் குறிப்பிட்டிருந்தோம்.
கியூபா, குவான்டனாமோ பே-யில் அமைந்துள்ள அமெரிக்க அரசின் தடுப்புச் சிறையில், எண்ணிக்கை வெளியே சொல்லப்படாத அளவில் தலிபான் அமைப்பின் உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் அநேகர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டவர்கள். அங்கு கைதியாக இருப்பவர்களில் அறியப்பட்டவர்களில் தலிபான்களின் முக்கியஸ்தர்கள் சிலரும் உள்ளனர்.
உதாரணமாக, ஆப்கானிஸ்தானின் முன்னாள் உட்துறை அமைச்சர் முல்லா காயிர் கோவா, மற்றும் வடக்கு ஆப்கானிஸ்தானின் முன்னாள் கவர்னர் தூருல்லா நூரி ஆகியோர் உட்பட, தலிபான் முக்கியஸ்தர்கள் பலர் அங்கு கைதிகளாக உள்ளனர். இவர்களில் சிலரை நல்லெண்ண அடிப்படையில் அமெரிக்கா விடுவிக்கலாம் என்று தெரியவருகின்றது.
அமெரிக்கா கொள்கையளவில் விடுவிக்க தீர்மானித்திருப்பவர்கள் தலிதான் அரசியல் பிரிவின் ஆட்கள்தான் என்பதுதான் தற்போது அடிபடும் பேச்சு. இவர்கள் ஆயுதம் ஏந்துி யுத்தம் புரிந்த ஹாட்கோர் தளபதிகள் அல்ல!
ஆனால், தலிபான்களோ, அமெரிக்காவுக்கு எதிராக யுத்தம் புரிந்த தமது ராணுவப் பிரிவுத் தளபதிகளை விடுவிக்குமாறு கோரலாம் என்று ஊகிக்கலாம். உதாரணமாக திபான்களின் ராணுவப் பிரிவில் தளபதியாக இருந்து, அமெரிக்க ராணுவத்திடம் சிக்கிக் கொண்ட முல்லா பாசில் அக்ஹன்ட் உட்பட வேறு சில ஹாட்கோர் தளபதிகளும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் யாரையாவது விடுவிக்குமாறு தலிபான்கள் கோரினால்தான் உள்ளது சிக்கல். காரணம், அமெரிக்க ராணுவமும் சி.ஐ.ஏ.-வும் அதை விரும்பப் போவதில்லை.
இதற்கிடையே மற்றொரு ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவலும் உள்ளது.
அதன்படி, தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள சிறைகளில் உள்ள தலிபான் ராணுவத் தளபதிகளை, விடுதலை செய்யாமல், வேறு ஒரு நாட்டின் சிறைக்கு மாற்றுவதற்கு அமெரிக்கா சம்மதிக்கலாம். அவர்களில் சிலரை கியூபாவில இருந்து வெளியேற்றி, கத்தார் போன்ற ஒரு நாட்டு அரசிடம் ஒப்படைக்க அமெரிக்கா சம்மதிக்கலாம்.
இது ஊர்ஜிதமாகாத தகவல்தான். ஆனால், பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்காக அமெரிக்கா காட்டும் ஒரு சிக்னலான இப்படியொரு காரியத்தை அவர்கள் செய்வதற்கு சான்ஸ் உள்ளது!
நன்றி விறுவிறுப்பு
No comments:
Post a Comment