Wednesday, January 4, 2012

கத்தரில் அலுவலகம்: சமாதான முயற்சியின் ஆரம்ப கட்டத்திற்கு தாலிபான் ஒப்புதல்


         காபூல்:அமைதி பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவின் முயற்சியின் அடிப்படையில் தாலிபானுக்காக கத்தரில் அலுவலகம் திறப்பதற்கான விவகாரத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாக தாலிபான் உறுதிச்செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானிற்கு வெளியே அரசியல் அலுவலகம் திறப்பதற்கு கத்தர் உள்ளிட்ட நாடுகளுடன் ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தை நடத்தியதாக தாலிபான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. தாலிபானின் செய்திகள் வழக்கமாக வெளியிடப்படும் வாய்ஸ் ஆஃப் ஜிஹாத் என்ற இணையதளத்தில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது.
ஆப்கானில் இருப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரவே வெளிநாட்டில் அலுவலகம் திறப்பதற்கு ஆலோசிப்பதாகவும், அந்நிய ராணுவம் ஆப்கானை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இதே அறிக்கையை தாலிபானின் செய்தித்தொடர்பாளர் ஸபீயுல்லாஹ் முஜாஹித் செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவின் சிறைக் கொட்டகையான குவாண்டனாமோ உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும். பேச்சுவார்த்தை தொடர்பாக ஆப்கானிஸ்தான் அரசின் பதிலை காத்திருக்கிறோம் என தாலிபான் கூறியுள்ளது.
கத்தரில் தாலிபானின் அலுவலகத்தை திறக்க ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய் அனுமதி அளித்துள்ள போதிலும், தாலிபான் – அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் கர்ஸாய் அரசின் பங்கு தெளிவாகவில்லை. அமெரிக்காவின் கைப்பாவைதான் கர்ஸாய் அரசு என தாலிபான் குற்றம் சாட்டியிருந்தது.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment