Saturday, January 21, 2012

கள்ள நோட்டு: முஸ்லிம்களை குறி வைத்து அடுத்த தாக்குதல்?!




இது வரை, அரச பயங்கரவாதம் முஊடக பயங்கரவாதமும் முஸ்லிம்களின் மீது, தீவிரவாத முத்திரை குத்தி வந்தன. பல குண்டு வெடிப்பு சம்பவங்களை, முஸ்லிம்களோடு இணைத்து, இவை பொய் பரப்புரைகளை அரங்கேற்றி வந்தன. தற்போது,  அனைத்து குண்டு வெடிப்புகளிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ, காவி பயங்கரவாதிகள் தான் உள்ளனர்
, என்பது நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு விட்டது. பல சாமியார்களும் காவி பயங்கரவாத சிந்தனை படைத்த, பல ராணுவ அதிகாரிகள் உட்பட பலரும் பல குண்டு வெடிப்புகளிலும், "கையும் களவுமாக பிடி பட்டு" சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதில் சிலர் ஜெயில் தண்டனையும் அனுபவித்து வருகின்றனர்....  அப்பாடா! முஸ்லிம்கள் மீது செயற்கையாக படிந்திருந்த, தீவிரவாத கரை நம்மை விட்டு அகன்று விட்டது, என கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்ட வேலையில், இனி முஸ்லிம்கள் மீது தீவிரவாத குற்றச்சாட்டுகள் எடுபடாது என்பதுடன், அது, காவி பயங்கரவாதிகள் மீதே "பூமராங்"காக, திரும்பி வருவதை கண்டு அவர்களால் பொறுக்க முடியவில்லை. எனவே, இவர்களின் அடுத்த தாக்குதல் இலக்கு தான், "கள்ள நோட்டு புழக்கத்தில்" பாகிஸ்தான் பெயரால் இந்திய முஸ்லிம்களை, இந்த இழி செயலோடு சம்மந்தப்படுத்தி, பல வழக்குகளை புனைய முற்படுகின்றனர்.
 கள்ள நோட்டு புழக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே "சிவகாசி" போன்ற சில ஊர்களுக்கு தொடர்புண்டு. தவிர தற்போது, அச்சு தொழிலில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சி மூலம், எவர் வேண்டுமானாலும் எளிதில் கள்ள நோட்டுக்களை தயாரிக்க முடியும்.  இது போன்ற கோணங்களில் சிந்திக்காமல், கள்ள நோட்டு விவகாரங்களில் அப்பாவி இந்திய முஸ்லிம்களை சிக்க வைத்து, அவர்களது வாழ்க்கையை சீரழிக்க போட்டுள்ள திட்டம் தான், பல "தனிப்படைகளை வைத்து விசாரணை" என்று சொல்லிக்கொண்டு, பல முஸ்லிம் பெயர்களை பயன்படுத்தி, ஊடக பயங்கரவாதமும் அரச பயங்கரவாதமும் கைகோர்த்து செயல்படுவதாகவே எண்ணத்தோன்றுகிறது. நாட்டு நலன் கருதி, இது வரை எவ்வளவு கள்ள நோட்டுகள் பிடிக்கப்பட்டிருக்கின்றன?   அதன் மதிப்பு எவ்வளவு? அதை, கண்டிப்பாக பாகிஸ்தான் போன்ற எதிரி நாடுகள் தான் புழக்கத்தில் விடுகின்றனவா? அல்லது இதன் பின்னணியில், வேறு சமூக விரோதிகள் உள்ளனரா?  என்பதை வெள்ளை அறிக்கை மூலம் தெளிவு படுத்த வேண்டும், என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.
நன்றி மறுப்பு 

No comments:

Post a Comment