டேராடூன்: ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தில் குதிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருந்த அன்னா ஹஸாரே குழு தற்போது திடீரென தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
அன்னா ஹஸாரே குழு மீது சரமாரியாக பல்வேறு புகார்கள் எழுந்ததால், அன்னா குழுவின் போராட்டங்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைய ஆரம்பித்தது. மும்பையில் அன்னா ஹஸாரே தொடங்கிய உண்ணாவிரதத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை. இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்ய மாட்டோம் என அன்னா குழு அறிவித்தது.இந்நிலையில், இந்த முடிவை அன்னா குழு நேற்று திடீரென கைவிட்டது. தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் ஊழலுக்கு எதிராக பிரசாரம் செய்யப்படும் என அன்னா குழு அறிவித்தது. ஹரித்வாரில் நாளை பிரசாரம் தொடங்கப்படுகிறது. அன்னா குழு உறுப்பினர்கள் அரவிந்த் கேஜ்ரிவால், கிரண்பேடி உட்பட பலர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். ஆனால் அன்னா வர மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி மறுப்பு
No comments:
Post a Comment