Saturday, January 7, 2012

கர்நாடக அரசு அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடியேற்றிய வகுப்புவாத பாசிச கும்பலை கடுமையாக தண்டிக்க வேண்டும்: பாபுலர் பிரான்ட்



Saturday, January 7th, 2012
பெங்களூர் : கர்நாடக மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்திலுள்ள சின்டகி தாசில்தார் அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடியேற்றிய சதியில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியாவின் கர்நாடக மாநில தலைவர் இல்யாஸ் முஹமத் தும்பே கேட்டுக்கொண்டார்.
ஆறு சங்க பரிவார கும்பலை சேர்ந்த குற்றவாளிகளை காவல்துறை கைது செய்ததை அவர் பாராட்டியுள்ளார். நாட்டின் இறையாண்மையை கேலிக்கூத்தாக்கிய , தேசத்தின் சமூக நலனுக்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் இந்த சதியில் மூளையாக செயல்பட்டுவரும் பெரிய தலைகளை தீவிர கண்காணிப்பு மற்றும் புலனாய்வில் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என அரசாங்கத்தை பாப்புலர் ப்ரண்ட் வலியுறுத்துகிறது என்று அங்கு நடந்த ஆர்பாட்டத்தின் போது குறிப்பிட்டுள்ளார்
இதே போன்ற சதி முயற்சி இரண்டு வருடங்களுக்கு முன்பே இதே சிண்டாகி எனுமிடத்தில் நடைபெற்றது . அப்போது அரசு நிர்வாக செயலின்மை காரணமாக தான் சதிகார கும்பலுக்கு திரும்பவும் அதே போன்ற சதி செயல்களில் ஈடுபட துணிச்சல் ஏற்பட்டுள்ளது . தற்போது பாகிஸ்தான் கொடியை ஏற்றிய சதி செயலில் ஈடுபட்டது மட்டுமின்றி அதனை காரணம் காட்டி முஸ்லிம்களின் மீது பழிபோட ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்ற நாடகங்களையும் அரங்கேற்றியுள்ளனர் (தென்காசி ஆர் எஸ் எஸ் குண்டுவெடிப்பு போல). வகுப்பு கலவரத்தை தூண்டி வகுப்புவாத தீயில் குளிர்காய சிண்டாகி பள்ளிவாசலையும் அசிங்கப்படுத்தி சேதப்படுத்தியுள்ளனர் . தாசில்தார் மற்றும் காவல்துறையினரை பதவி விலக வலியுறுத்தி நாடகம் ஆடியது, வணிக நிருவனகளை திட்டமிட்டு அடைக்க செய்தது, பொதுமக்களின் இயல்பு வாழ்கையை முடங்க செய்தது என இவை அனைத்தையும் பார்க்கும் போது ஒரு மிகப்பெரிய வகுப்பு கலவரத்தை பிஜப்பூர் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்க திட்டமிட்டிருந்தது தெரியவருகிறது என்று குறிப்பிட்டுள்ளார் .
மேலும் அவர் குறிப்பிடும்போது , இந்த கைது நடவடிக்கைக்கு பிறகு, கைது செயயப்பட்ட உடனேயே தலைவர்கள் , இவை ரம்சென கும்பல்கள் என்று அறிக்கை வெளியிடுகின்றனர் . ஆர் எஸ் எஸ் பாஜக வை விட்டும் பிரித்து இவர்களை தனிமைப்படுத்துகின்றனர் . ஆனால் இக்குற்றவாளிகள் வெறும் ரம்சென கும்பல் மட்டுமல்ல அவர்கள் ஆர் எஸ் எஸ் பாஜக செயல்வீரர்கள் என்பதை மறைக்க நினைக்கிறார்கள்.

இந்த சதிசம்பவத்திற்கு பின்னால் ஒளிந்திருப்பது ஒரு உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் என்றும் கூறப்படுகிறது . எனவே இந்திய சிவில் சமூகத்தின் விரோதிகளை விரைவில் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
இது தேசத்திற்கெதிரான கூட்டு சதி என்பதாலும், இச் சதி தேசத்தின் ஓட்டு மொத்த மக்களுக்கேதிரனது என்பதாலும் இதனை வழக்கம்போல தனித்த சம்பவமாக பார்க்காமல் இதனை விசாரிக்க மத்தி சிறப்பு புலனாய்வு படை அல்லது தேசிய புலனாய்வு
நிறுவனம் (NIA) மூலம் விசாரித்து குற்றவளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் . பாசிச சங்க பரிவார கும்பல்கள் சதி செயல்கள் மூலம் நாட்டின் பொது அமைதியையும் இறையாண்மையையும் கெடுத்து வருவதை வாடிக்கையாக கொண்டிருப்பதால் அதனை தடைசெய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்

No comments:

Post a Comment