அமெரிக்கப் பிரஜை ஒருவருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து செயற்பட்ட குற்றத்துக்காக இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் கடந்த மாதம் நிரூபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஈரானில் உள்ள தமது பாட்டியை சந்திப்பதற்காக இவர் அங்கு செல்வதாக தெரிவித்து, புலனாய்வுப் பணிகளை மேற்கொண்டுவந்ததாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை எனவும், குறித்த பிரஜையை விடுவிக்குமாறும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
No comments:
Post a Comment