ஜப்பானில் கடந்த ஆண்டு மார்ச் மாதம்நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டது.இதையடுத்து புகுஷிமா டச்சி அணு உலைவெடித்தது.
இதனால் அங்கிருந்து கதிர்வீச்சு பரவி ஆபத்தைஏற்படுத்தியதால், உலகம் முழுவதும் அணுஉலை மீதான சர்ச்சை எழுந்தது. எனவே ஜப்பான்அணு உலை கொள்கையில் மாற்றம்செய்துள்ளது.
சுனாமியால் சேதம் அடைந்த புகுஷிமா அணு உலை 1967ம் ஆண்டு கட்டப்பட்டது. மத்தியஜப்பானில் உள்ள பிருகா மற்றும் மிகாமா உலைகள் 1970ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இவை தங்கள் உற்பத்தியை தொடங்கி 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே இவற்றின்உற்பத்தியை நிறுத்தி விட்டு அணு உலைகளை அழிக்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளதாகதெரிகிறது.
இந்த முடிவை மேற்கொள்ளும் பட்சத்தில் 54க்கும் மேற்பட்ட அணு உலைகளின் உற்பத்திநிறுத்தப்பட்டு அழிக்கப்படும். பல பரிசோதனைகளுக்கு பிறகு மிகவும் சக்தி வாய்ந்தபழமையான அணு உலைகளை மீண்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-NewsOne-
நன்றி மீள்பார்வை
No comments:
Post a Comment