Wednesday, February 22, 2012

கோவை : முஸ்லிம் கடைகள் மீது இந்து முன்னணி தாக்குதல்! - திடீர் பதட்டம்!!



கோயமுத்தூர்: பிப்ரவரி 22,   கூடங்குளம் அணு உலையை திறக்க கோரி, கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில், ஒரு நாள் முழு கடை அடைப்பு போராட்டம் இன்று (22ம் தேதி) நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலையில் வழக்கம்போல் கோவை ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி உள்ளிட்ட பல இடங்களில் வணிகர்கள் கடைகளை திறந்தனர். இதற்கிடையில், ஆவாரம்பாளையம் ரோடு, சலீவன் வீதி, சவுரிபாளையம், கிராஸ்கட் ரோடு, செல்வபுரம், இடையர் வீதி, டி.பி.ரோடு உள்ளிட்ட பகுதியில் முஸ்லிம்கள் நடத்தும்,  பேக்கரி, ஓட்டல்கள் மீது மர்ம நபர்கள் திடீரென கற்களை வீசிவிட்டு தப்பினர்.  இதில் கடைகளின் ஷோ கேஸ் கண்ணாடிகள் உடைந்தன.  கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள், அங்கு சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை வெளியே அனுப்பி விட்டு, தாக்குதல் நடத்தினர்.  நகரில், 11 இடங்களில் பேக்கரி, ஓட்டல்கள் மீது தாக்குதல் நடதத்ப்பட்டது.   கடையை திறக்க வந்த நகை கடை உரிமையாளர்களும் தயக்கத்துடன் திறக்காமல் காத்திருந்தனர்.

 சில மணி நேரத்துக்கு பிறகு ஒவ்வொருவராக கடைகளை திறக்க துவங்கினர். மதியத்துக்கு மேல் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. ஒருசில கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தன.

நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment