7 Feb 2012
சென்னை:கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது என தமிழக அரசு உறுதியளித்து, அதனை ஏற்று பெரும்பாலான மக்கள் அணு உலையைத் திறக்க ஒப்புக் கொண்டால் போராட்டத்தை கைவிடத் தயாராக இருப்பதாக அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று(செய்தியாளர்களிடம்) உதயகுமார் கூறியது:
இந்திய-ரஷ்ய அரசுகளுக்கு இடையே செய்யப்பட்டுள்ள இழப்பீடு ஒப்பந்தம், கழிவு மேலாண்மை ஆகிய அடிப்படை விவரங்களைக் கூட தராமல் அணுஉலை பாதுகாப்பானது என மத்திய அரசு அமைத்த முத்துநாயகம் குழு அறிவித்துள்ளது.
கூடங்குளம் பகுதி மக்களைச் சந்தித்து, பெரும்பாலானோரின் கருத்துகளுக்கு ஏற்ப இக்குழு முடிவெடுக்க வேண்டும். எங்களை மீறி அணுஉலை இயங்க முடியாது. இயங்கவும் விடமாட்டோம்.
பிப்ரவரி 26-ல் சென்னையில் மாநாடு:
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தைத் திட்டமிட்டு அழிக்க நினைக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், கூடங்குளம் அணுஉலையை நிரந்தரமாக மூட தமிழக அரசை வலியுறுத்தியும் பிப்ரவரி 26-ம் தேதி சென்னையில் அணுஉலை எதிர்ப்பு மாநாடு நடைபெறவுள்ளது. மயிலாப்பூர் மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடைபெறும்.
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தைத் திட்டமிட்டு அழிக்க நினைக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், கூடங்குளம் அணுஉலையை நிரந்தரமாக மூட தமிழக அரசை வலியுறுத்தியும் பிப்ரவரி 26-ம் தேதி சென்னையில் அணுஉலை எதிர்ப்பு மாநாடு நடைபெறவுள்ளது. மயிலாப்பூர் மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடைபெறும்.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக கூறியுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் கருத்துக்கு நாங்கள் மதிப்பளிக்க விரும்பவில்லை.
நான் வெளிநாட்டு பணம் வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ள மத்திய அமைச்சர் வி.நாராயணசுவாமியின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன். பணம் வாங்கியதற்கான ஆதாரங்களை நாராயணசுவாமி அளிக்கவில்லை. போராட்டம் நடத்துவதற்காக பணம் வாங்கியதாக குற்றம் சாட்டும் ப.சிதம்பரத்தின் அறிக்கையை வரவேற்கிறோம். குற்றவாளி என நிரூபித்தால் எந்த தண்டனையும் வாங்க தயார். இவ்வாறு உதயகுமார் கூறினார்.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment