Thursday, May 31, 2012

வெறும் 5 நிமிடம் ஒதுக்கி இதை பாருங்களேன்!



நமது இந்திய தேசத்தில் இன்றைய நிலை!
மும்பையில் இந்த இடத்தில் மாதம் 200 ரூபாய் வாடகையில் வீடு கிடைக்கும் - தாராவி
மும்பையின் மொத்த ஜனத்தொகையில் 55% இது போன்ற இடத்தில்தான் வாழ்கிறார்கள் 
இதே மும்பையில் 5000 கோடி ரூபாயில் 1 வீடு – ஆண்டில்லா அம்பானியின் வீடு...!
இந்திய ஜனத்தொகை120 கோடி.. இவர்களில் பணமாக ரூ.10 லட்சம் வைத்திருப்பவர்கள் வெறும் 153,000 நபர்கள் தான் (0.013%)... பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு ஒரு உதாரணம்
விலை வாசி ஏற்றம் – விழி  பிதுங்கும் நடுதர மக்கள்
81 நாடுகளில் பசியால் வாடுபவர்களது கணக்கெடுப்பு
இந்தியா 67ஆவது இடத்தில் உள்ளது.

சூடான், சிறிலங்கா, வியட்நாம் போன்ற நாடுகளை விட பின்தங்கிய நிலை
 
தலீத்களை விட பின்தங்கிய நிலையில் முஸ்லிம்கள் – நீதிபதி ராஜேந்திர சச்சார்
சங்க பரிவாரங்களால் முஸ்லிம்கள் தொடர் அச்சுறுத்தப்படுதல் – வேடிக்கை பார்க்கும் அரசாங்கம்...



துப்பாக்கி சுடும் பயிற்சி – இந்த சப்தங்கள் அரசின் காதினுள் நுழைவதில்லை



முஸ்லிம்களுக்கெதிரான மிரட்டல்கள்....

300 மசூதிகளை இடிக்க வேண்டும்... இந்தியாவை ஹிந்து ராஷ்ரா என்று அறிவிக்க வேண்டும்.... – சுப்ரமணிய சுவாமி


இரட்டை நீதி

மாலேகானில் குண்டு வைத்த குற்றவாளிகளுக்கு உதவிய சிவநாரணயன் கல்சங்கரா, ஷியாம் சாகுவிற்கு பெயில்

அநீதியாக கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் 3 வருடங்களாக இன்னும் சிறையில் வாட்டம்



கேள்வி கணக்கில்லாத போலி என்கவுண்டர்கள் – செய்வதறியாத  முஸ்லிம்கள் 


குண்டு வெடிப்பில் கைது செய்யப்படும் அப்பாவி முஸ்லிம்களுக்கு சட்ட ரீதியான உதவி செய்த ஃபைஸ் உஸ்மானி காவல் நிலையத்தியத்தில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை



முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் இஸ்லாத்தினை தீவிரவாதமாகவும் சித்தரித்தல்



நாட்டை ஆண்ட சமூகம்....


100 ஆண்டுகளில் வாழ வழியில்லாத சமூகமானது....!


நாட்டில் புரையோடி கிடக்கும் ஊழல்

தலீத்களின் கண்ணியம் மற்றும் உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லை



தேவை ஒரு வீரியமிக்க போராட்டம் – களம் இறங்குகிறது
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா


தென் மாநிலங்களில் கடை கோடி கிராமத்திலும் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களின் சேவை 


தற்போது வடஇந்தியாவை நோக்கி.... 18 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்டின் மக்கள் சேவகர்கள்...!


வடஇந்தியாவில் பேராதரவுடன் பாப்புலர் ஃப்ரண்ட்

Tuesday, May 29, 2012

இந்திய தேசிய கொடியே வடிவமைத்து பதுருதின் தியாப்ஜி

பதுருதின் தியாப்ஜி குடும்பம் தான் இந்திய தேசிய கொடியே வடிவமைத்து என்று நம்மில் எத்தனை பேருக்கு இது தெரியும் கண்டிப்பா இதை படித்து மறைக்க பட்டுகொண்டு இருக்கும் வரலாறை தெரிந்து கொள்ளுகள் தெரியாதவர்களுக்கு தெரிய படுத்துங்கள் !!!! ( மறுபதிப்பு )
 


லண்டனில் மெட்ரிக் படிப்பை முடித்து Middle Temple Barrister (வழக்ளறிஞர்)April 1867 தான் பணியே தொடர்ந்தார் பாம்பேயின் முதல் வழக்ளறிஞர்ராக திகழ்ந்த இவர் . பின்னர் மிகவும் புகழ் பெற்று விளங்கினர் . 1895 பாம்பே உயர்நிதி மன்றத்தில் நீதி பதியாக பணியாற்றினார் பின்பு 1902 இவரே முதல் இந்திய தலைமை நீதிபதியாக இருந்தார் மற்றும் பாரபட்சம் பார்க்காமல் தீர்ப்பு வழங்குவதில் கண்ணிய மிக்கவராக இருந்தார் .பல வருடகாலம் பொது வாழ்க்கையில் ஈடுபற்றார் இந்திய நேஷனல் காங்கிரஸின் முதல் முஸ்லிம் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார் . 1876 ajmuan i islam இயக்கம் மூலமாக அணைத்து முஸ்லிம் மக்களின் முனேற்றதிர்க்காகபாடுப்பட்டார் . இந்தியாவில் முஸ்லிம் மக்கள் அனைத்து மக்களுடனும் சகோதரதுடனும் சரி சமமாகும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் .அரசியல் வாழ்கையில் நல்ல பெயரும் பெற்றார்

இவருடைய ஆளுமை திறனால் தான் முஸ்லிம்கள் அதிகமா இந்திய நேஷனல் காங்கிரசில் சேர்ந்தனர் என்று புகழாரம் சூற்றினர்
மகாத்மா காந்திஜி .அஹ்மத் கான் மற்றும் Badruddin Tyabji இந்திய நேஷனல் காங்கிரசுக்கு பெரும் பங்கு ஆற்றினர்.முஸ்லிம்விரோத
கொள்கைக்கு எதிராக இருந்தார் . இந்தியாவில் மத சார்ப்பற்ற அரசியல் வர விரும்பினார் .அவருடைய மனைவி தான் முதல் சுதந்திர இந்தியாவில் தேசிய கொடியே வடிவமைத்தார் . அவர்களின் குடும்பமே சமுதயதிர்க்கும் கல்விக்கும் இந்திய விடுதலைக்கும் பெரும் பங்கு ஆற்றினார்கள்

ஆனால் தேசிய கொடியே ஒரு முஸ்லிம் தான் வடிவமைத்தார் என்பதற்காக பல இந்துத்துவ அமைப்புகள் அவர்களுடைய அலுவலங்கள் மற்றும் பொது இடங்களில் இந்திய தேசிய கொடியே பயன் படுத்துவதே இல்லை , அவர்கள் அவர்களின் காவி கொடியே தான் ஏற்றுவார்கள் . ஆனால் டெல்லி செங்கோட்டையில் தான் பிரதமர் கொடியே ஏற்றுகிறார்.அப்போ அந்த கட்டிடம் யார் கட்டியது என்று அவர்கள் சிந்திக்கவில்லை . அதை ஷாஜகான் தான் கட்டினர் என்று மறந்து விட்டனர் .அதனால் அவர்களுக்கு நாம் நியாபகம் காட்டவேண்டும் அது நமது கடமை அல்லவா ?????????

Friday, May 25, 2012

ஓராண்டு தமிழக அரசின் சாதனை மற்றும் ராமநாதபுரம் தொகுதியின் சாதனை!!!

இஸ்லாமிய சமுதாயம் அடைந்த பயன்களும் முஸ்லிம் MLA கள் சமுதயத்திருக்கு ஓராண்டு அளித்தி பங்களிப்பு.
இராமநாதபுரம் MLA பற்றிய பத்திரிக்கை செய்தி 
சட்டசபையில் பேச அடிக்கடி வாய்ப்பு கிடைத்தும் ஓராண்டு இஸ்லாமியர்களுக்கு பெற்றுதந்த சாதனை துளிகள் 


ராமநாதபுரம் MLA இஸ்லாமியர்களுக்கு செய்த சாதனை தமிழக முதல்வரை பாராளுமன்றத்தில் செல்வாக்கு 
உயர்த்வதை பற்றி ஓராண்டு சாதனையாக பேசியுள்ளார். இஸ்லாமியர்களுக்கு இடதுகிட்டை உயர்த்தாததை பற்றி பேசாமல் AIADMK MLA பேசுவதை போன்று பேசி தான் ஒரு அரசியல்வாதி என்று நிருபிட்டுள்ளர் 

-  சாமானியன்   

Thursday, May 24, 2012

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நிபந்தனையின்றி திரும்பப் பெற SDPI கோரிக்கை 24 May 2012 SDPI


சென்னை:கூடங்குளம் போராட்டக்குழு மற்றும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை எந்த நிபந்தனையுமின்றி திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மே25 ல் சென்னை மெமோரியல் ஹால் முன்பு சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி விடுத்துள்ள பத்திரிக்கை அறிக்கை வருமாறு

‘கூடங்குளம்  அணு மின் நிலையத்தை எதிர்த்து அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த 6 மாத காலமாக தன்னெழுச்சியோடு போராடி வருகின்றனர்.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் அணு உலையை மூடிவரும் நிலையில், உலகம் அணு உலையின் ஆபத்துக்களை கண்டு வரும் இத்தருணத்தில் மக்களின் அச்சம் இயற்கையானதே!



பொதுமக்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் முன்னாள் நீதிபதிகள், உயர் பதவி வகித்த அதிகாரிகள், முன்னாள் இராணுவத் தளபதிகள், விஞ்ஞானிகள், சமூக, அரசியல் தலைவர்கள்,  மனித உரிமை ஆர்வலர்கள் என அணு உலைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் அணி திரண்டு வருவது போராட்டக்காரர்களின் கோரிக்கைகளின் நியாயத்தை உணர்த்துகிறது.

ஜனநாயக ரீதியாக போராடி வரும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை புறக்கணிப்பதும், அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதும், வழக்குகள் தொடுப்பதும் ஜனநாயக அரசுகளுக்கு உகந்ததல்ல.

எனவே கூடங்குளம் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும். பழி வாங்கும் நோக்குடனும், அரசியல் ரீதியாகவும் போராட்டக்காரர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் எந்த நிபந்தனையுமின்றி அரசு திரும்பப் பெற வேண்டும்’ என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும்; ‘இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மே-25ல் சென்னை மெமோரியல் ஹால் முன்பு மாலை 4 மணியளவில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகிறது. நீதிக்கான இப்போராட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்’ எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி: பெட்ரோலின் விலை வரலாறு காணாத அளவு விலை உயர்வு


பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 உயர்வு

புதுடெல்லி: பெட்ரோலின் விலை வரலாறு காணாத அளவு உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தப்பட்டுள்ளது.இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது