சுதந்திரத்தின் காவலர்கள்
அந்த நாள் ஞாபகம் என்ற கட்டுரையில் சுதந்திர போராட்ட வீரர் அஸ்பகுல்லா
கான் பற்றி கட்டுரை மிகவும் பாராட்டகுரியது. சுந்திரத்தின் போராட்ட
வீரர்களை காட்டிக்கொடுக்கும்படிச் செய்ய ஆங்கிலேயர்கள் எவ்வளவே
முயன்றனர் அவர் மறுத்துவிட்டர் என்பது முஸ்லிம்கள் என்றும் நாட்டுக்காக
உயிர் கொடுப்பவர்களே தவிர கைபர் கனவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்த
ஆரியர்களை போல காட்டிக்கொடுப்பவர்கள் இல்லை என்பதை இக்கட்டுரை அழகாக
எடுத்துரைக்கிறது.
மன்னின் மைந்தர்களான முஸ்லிம்கள் வரலாறு எங்கும் சுதந்திரத்திற்காக உயிரை
கொடுப்பவர்களில் முதலானவர்கள் என்பது நிதர்சனமான உண்மை. சுதந்திர
போராட்டத்தில் தூக்கிலிடப்பட்ட முதல் முஸ்லிம் அஸ்பகுல்லா கான் என்ற பதமே
தவறானது. அந்நியர்கள் நம் நாட்டை கைப்பற்றினார்களோ அன்றிலிருந்து பல
நூறு மேற்பட்ட சுதந்திர போராட்டத்தில் இடுபட்ட முஸ்லிம்கள்
தூக்கிலிடப்பட்டடுள்ளார்கள்.
மக்கான் 1800 ஆகஸ்ட் 25 தேதி, கான்பகதூர்கான் 1857, ஜாபர் அலி 1857,
சதார் கான் 1877. இதை போன்று வரலாறு எங்கும் சொல்லிக் கொண்டே போகலாம்.
வரலாற்று அறிஞர்களிள் முஸ்லிம்கள் தங்கள் விகிதாசாரத்தையும் விட சுதந்திர
போராட்டத்தில் இடுபட்டு உயிரை நீத்துள்ளர்கள். வரலாறு தெரியாதவன் வரலாறு
படைக்கமுடியாது.
N. செய்யது போகலூர்
No comments:
Post a Comment