Monday, November 21, 2011

குஜராத் கூட்டு படுகொலை


குஜராத் கூட்டு படுகொலை: சங் பரிவார் பயங்கரவாதத்தின் நேரடி சாட்சி


















ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலைச் செய்யப்பட்ட குஜராத் இனப்படுகொலை வழக்குகளில், அதிகமாக விவாதிக்கப்படாத சம்பவம்தான் ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை வழக்கு.
மோடி அரசின் ஒத்துழைப்புடன் குஜராத் முழுவதும் சங்க்பரிவார பயங்கரவாதிகள், வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு கோரத்தாண்டவம் ஆடிய வேளையில், தப்பி பிழைத்தவர்கள், ஸர்தார்புராவில் உள்ள இப்ராஹீம் ஷேக்கின் வீட்டில் அடைக்கலம் தேடினர்.
அபயம் தேடியவர்களை விடாது துரத்திய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள், இப்ராஹீமின் வீட்டை பூட்டி உள்ளே பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொளுத்தினர்.
உடலில் தீ பற்றிய பொழுது, தப்பிக்க கூட வழிதெரியாமல், தீயில் வெந்து அந்த அப்பாவிகள் மரணித்தார்கள், என இச்சம்பவத்தில் தப்பிப்பிழைத்தவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.
கொல்லப்பட்ட33 பேர்களில் 22 பேர் பெண்களாவர்.
மீதமுள்ளவர்கள் குழந்தைகள்.
எட்டுமாதமே ஆன, பச்சிளம் குழந்தையும் இந்த பாதகர்களின் கொடூரத்திற்கு பலியானது.
கொல்லப்பட்டவர்களில் 11 பேர் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களாவர்.
இதனை அவர்களது உறவினரான அய்யூப் மியா, ரஸூல் மியா ஷேக், வாரப்பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தனர்.


குஜராத் : இன​ப்படுகொலைக்​கு உதவியதன் மூ​லம் மோடியிடம் ஆதாயம் பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் !

















குஜராத்தில், முஸ்லிம் இனப்படுகொலை நடைபெற்ற வேளையிலும், அதனைத் தொடர்ந்தும், மோடியின் கட்டளைகளை தவறாமல் நிறைவேற்றி ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு உதவிய, ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு மோடி அரசு, பதவி உயர்வும், ஓய்வுப்பெற்ற பிறகும் தொடர்ந்து பல பதவிகளை வழங்கி வருகிறது.
பி.சி.பாண்டே(1970பாட்ச்):-....
இனப்படுகொலை நடைபெற்ற வேளையில், அஹ்மதாபாத் மாநகர போலீஸ் கமிஷனர்.
ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கூட்டுப் படுகொலை நிகழ்த்துவதற்கு, உதவும் விதமாக போலீஸை செயலற்றதாக்கினார்.
அவர், 1000 முஸ்லிம்கள், அஹ்மதாபாத்தில் கொல்லப்பட்ட வழக்கில் ஆதாரங்களை அழித்ததும், தொடர்ந்து நடந்த போலி என்கவுண்டர்களில் பங்கு வகித்ததும் நிரூபணமானது.
2004-ஆம் ஆண்டு மார்ச் மாதம், அன்றைய பா.ஜ.க அரசு, இவரை சி.பி.ஐ கூடுதல் இயக்குநராக நியமித்தது.
இதற்கு எதிராக, மனித உரிமை ஆர்வலர், டீஸ்டா ஸெடல்வாட் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
குஜராத் வழக்குகளின் விசாரணை பொறுப்புகளிலிருந்து, நீதிமன்றம் பாண்டேவை நீக்கியது.
2009ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பாண்டே, குஜராத் மாநில போலீஸ் வீட்டுவசதி வாரியத்தின் சேர்மனாக நியமிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment