Sunday, December 25, 2011

பிரான்சில் நிகாப் அணிந்ததற்காக சிறைக்கு சென்ற முதல் பெண்மணி

Ahmas, 32, pictured with would-be presidential candidate Kenza Drider, is taking her case to the European Court of Human Rights
பாரிஸ்:முதன் முறையாக நிகாப் அணிந்ததற்காக பிரான்சில் 32  வயது முஸ்லிம் தாயார் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹிந்த் அஹ்மாஸ் என்னும் அவர் கடந்த ஏப்ரல் மாதம் பாரிஸில் உள்ள எலிசீ அரண்மனைக்கு அருகில் பிரான்சில் தடை  செய்யப்பட்ட நிகாபை அணிந்ததற்காக கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு பாரிஸ் நீதிமன்றம்  நாள் சிறை தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.  இதனை எதிர்த்து அவர் மனித உரிமை நீதிமன்றத்திற்கு செல்லப் போவதாக தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி அரசு முன்னதாக முஸ்லிம்கள் அணியும் பர்தா மற்றும் தலைக் கவசமான நிகாப் ஆகியவற்றை தடை செய்திருந்தது. அஹ்மாஸ் தனது நிகாபை விளக்க முன்வராததால் இந்த வழக்கு விசாரணைக்கு அஹ்மாஸ் வருவதை நீதிபதி தடைசெய்திருந்தார். மேலும் அஹ்மாஸ் அவர்களுக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர்கள் அஹ்மாசுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் மேலும் 27,000 யுரோ அபராதமும் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.  மேலும் அஹ்மாசுக்கு 15  நாள் குடிமகன் நடந்து கொள்ளும் முறை குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்தார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட அஹ்மாஸ் கூறியதாவது “தாம் ஒருபோதும் நிகாபை விளக்கப் போவது இல்லை என்றும் குடிமகன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற பயிற்சி நீதிபதிக்குத்தான் தேவை” என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக இன்னொரு சம்பவத்தில் நிகாபை விளக்க மறுத்ததற்காக 100 யுரோ அபராதம் கட்டியவர் இந்த அஹ்மாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் கேன்சா திரிதர் என்னும் மற்றொரு நிகாப் அணியும் பெண்ணுடன் சேர்ந்து “என்னுடைய உரிமையை பறிக்காதீர்” என்னும் போராட்டத்தை துவக்கியுள்ளார். கேன்சா திரிதர் வருகின்ற அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அஹ்மாஸ் நிகாப் அணிந்ததற்காக சிறைக்கு சென்றால் முஸ்லிம்களின் உரிமைகளை குறித்து போராடும் அனைவரும் இதனை உதாரணமாக்கி பிரச்சாரம் செய்வர் எனத் தெரிகிறது.
மேலும் பிரான்ஸ் அதிபர் சர்கோசி நிகாபை தடை செய்தது முஸ்லிம்களை குறிவைத்து அல்ல மாறாக தீவிரவாதிகள், கடைகளில் திருடுபவர்கள் ஆகியோரை எளிதில் அடையாளம் கண்டு பிடிக்கவே என்றும் கூறியுள்ளார். ஆனால் அஹ்மாசை நிகாபை விளக்கவில்லை என்பதற்காக கைது செய்துள்ளனர். மேலும் அஹ்மாசின் வழக்கறிஞர் டேவேர்ஸ் அவர்கள் நிகாபிர்கான தடை முற்றிலும் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் உலகில் முதன் முறையாக நிகாபை தடை செய்த நாடு பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பெல்ஜியம், ஹாலந்து போன்ற நாடுகள் நிகாபை தடை செய்துள்ளன. மேலும் தற்போது பிரிட்டனில் நிகாபை தடை செய்ய அரசு முயன்று வருகிறது எனபதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment