அமெரிக்க தளங்களிலிருந்து ஈரானுக்கெதிராக ஏவுகணைகள் ஏவப்பட்டால்..! இலக்குகளை ஈரான் தீர்மானிக்கும்..!
அதிரச்சியில் உறைந்த அமெரிக்கா…!
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகள் ஈரானுடன் போர் செய்வதற்கு ஆயத்தம் செயது கொண்டிருக்கின்ற இந்த நிலையில் சென்றவாரம் சகல ஊடகங்களிலும் ஒரு செய்தி வெளியானது. இந்த செய்தியைப் பார்த்ததும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகள் அதிரச்சியில் உறைந்தது.
அது என்ன செய்தி..!
ஈரான், அமெரிக்க உளவு விமானம் ஈரானிய வான் பரப்பில் பறந்த போது விமானத்திற்கும் அமெரிக்க தரை கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையிலான நுண்அலை இயக்க தொடர்பை துண்டித்ததோடு அல்லாமல் அந்த விமானத்தின் கட்டுப்பாட்டை தம் வசப்படுத்தி தாம் நினைத்த இடத்தில் சிறப்பாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வு அமெரிக்காவை மறைமுகமாக அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. தரையிறக்கும் காட்சிகளை ஈரான் வெளியிட்டுள்ளது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி இப்படி கூறுகிறார் எமது US RQ-170 உளவு விமானம், ஈரானில் விழுந்து விட்டது. அதை, ஈரானியர்கள் கைப்பற்றியுள்ளனர். அந்த விமானத்தை எம்மிடம் திருப்பித் தரவேண்டும் என்று தெரிவிக்கிறார்.
அதேபோன்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், இது குறித்து கூறுகையில், “ஈரான் சிறை பிடித்துள்ள, அமெரிக்க விமானத்தை திருப்பித் தருமாறு பலமுறை, ஈரான் நாட்டிடம் கோரி உள்ளோம். ஈரான் நாட்டின் தற்போதைய நடத்தை, அனைவருக்கும் தெரியும். எனவே, அந்நாட்டிடம், நாங்கள் இதற்கு மேல் எதிர்பார்க்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி அதாவது அமெரிக்க ஆளில்லா உளவு விமானம் RQ-170 ஈரான் ராணுவத்தினால் வெற்றிகரமாக தரையிறக்கப் பட்ட செய்தி சகல இணையத்தளங்களிலும் வெளியாகியது. என்றாலும் இந்த செய்தியிலுள்ள மிகப்பெரிய ராணுவ உண்மையினை சொல்ல மறந்து விட்டன. ஆனால் அமெரிக்காவுக்கு மட்டும் அது தெரிந்தது. அதனால்தான் அஞ்சி நடுங்கியது.
அது என்ன விசயம்..?
அமெரிக்கா போன்ற நாடுகள் போரில் பயன்படுத்துகின்ற 100% ராணுவ தொழிநுட்பம் எப்படி என்றால் தற்போதைய அமெரிக்க ஆளில்லா உளவு விமானம் RQ-170 தொழிநுட்பத்தை ஒத்ததாகும். அதாவது ஏவுகணைகளை ஏவுதல், அது செல்ல வேண்டிய பாதை, அது வெடித்து சிதற வேண்டிய இலக்கு போன்ற அனைத்த விசயங்களையும் அமெரிக்க தரைக்கட்டுப் பாட்டு மையத்திலிருந்து நுண் அலை இயக்கத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது. பாரிய குண்டுகளையும் ஏவுகணைகளையும் சுமந்து செல்லக் கூடிய பிரமாண்டமான யுத்த விமானங்களிலும் இதே தொழிநுட்பம்தான் பயன்படுத்துகின்றது. இந்த தொழிநுட்பத்தினை திசை திருப்பக் கூடிய வல்லமையை ஈரான் ராணுவத்தினர் பெற்றுள்ளனர்.
அதாவது அமெரிக்க தளங்களிலிருந்து ஈரானுக்கெதிராக ஏவுகணைகள் ஏவப்பட்டால்.. ஈரான் ராணுவம் எப்படி உளவு விமானம் RQ-170 யை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நினைத்த இடத்திலே தரையிறக்கினார்களோ அதே போன்று… ஏவுகணைகளையும் வான்வெளியில் வைத்தே கட்டுப்படுத்தி இஸ்ரேல் போன்ற அமெரிக்க நேசநாடுகளின் பககம் வெடித்து சிதறுவதற்கு திருப்பி விடலாம் அலலது எந்த தளத்திலிருந்து வந்ததோ அந்த தளத்திற்கு அனுப்பி விடலாம்.
ஈரானின், தரை கட்டுப்பாட்டு மையத்திற்கும் ஏவுகணை/விமானத்திற்கும் இடையிலான நுண்அலை இயக்க தொடர்பை துண்டிக்கும் தொழிநுட்பம்
No comments:
Post a Comment