Posted on December 21, 2011 by புமாஇமு
ரஷியாவில் பகவத் கீதை ’நூல்’ வன்முறையினை தூண்டக்கூடியது என்பதால் அதனை தடை செய்ய வேண்டும் என வழக்கு போட்டு உள்ளனர். இதனை தடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் கூச்சல் போட்டு பாஜக இந்து மதவெறி கும்பல் அமளியில் ஈடுபட்டு உள்ளது.
மக்களை நான்கு வர்ணங்களாக பிரித்து நாலாயிரம் சாதிகளாக பிளவுபடுத்தி, மக்கள் அனைவரும் சமம் இல்லை என்பதை வெளிப்படையாகவே அறிவித்து உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சீர்க்குலைக்கும் மனுதர்மம் தான் ’பகவத் கீதை’ முழுவதும் விரவிக்கிடக்கிறது.
வன்முறையின் கீழ் பார்ப்பன மனுதர்ம வர்ண ஆதிக்கத்தை நிறுவும் பகவத் கீதையினை ரஷியாவில் தடை செய்ய கூடாது என இங்குள்ள காவி கும்பல் கூச்சல் போடுகின்றனர்.
பாரதி குறித்து அவருடைய நூல்களை படிக்காமலேயே பாரதி பக்தர்களாக இருப்பது போல, மனுதர்மம், பகவத் கீதை போன்றவைகளை படிக்காமலேயே மக்கள் இந்துமத பகதர்களாக இருக்கும் தைரியத்தில் தான் இந்த காவி கும்பல் ஆட்டம் போடுகிறது,
ஆனால் பகவத் கீதையினை படித்து பார்த்தால் புரியும், இது விஷக்கிருமி என்பதும்; ரஷியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தடை செய்யப்பட வேண்டியதுதான் ’பகவத் கீதை’ எனும் விஷக்கிருமி என்பதும்.
தொடர்புடைய பதிவுகள்:
No comments:
Post a Comment