பகவத்கீதை பல ஆண்டுகளுக்குப்பின் இன்று மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. பகவத்கீதையை தடை செய்யக்கோரி ரஷியாவில் உள்ள டோம்ஸ்க் நகர நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை வரும் 28 - ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இது நடைபெற்றுக்கொண்டிருப்பது ரஷியாவில்... ஆனால் அதற்குள் இங்கே பாரதீய ஜனதா கட்சி வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கத் தொடங்கிவிட்டார்கள். வழக்கம் போல் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்டனர். பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. பகவத்கீதை ''தேசிய புத்தகமாக'' அறிவிக்கவேண்டுமாம். பா. ஜ. க. -வின் மக்களவைத் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் போகிறபோக்கில் சும்மா சொல்லிட்டுப் போய்ட்டாங்க. போதாக்குறைக்கு இந்திய அரசும் இது ஒரு மதசார்பற்ற நாடு என்பதை மறந்துவிட்டு, ரஷியாவின் பகவத்கீதை தடையை கண்டிக்கிறது.
கோடிக் கோடியாய் குவியும் அமெரிக்க நிதியில் கொழுத்து வளரும் ''இஸ்கான்'' என்று அழைக்கப்படும் ''சர்வதேச ஹரே கிருஷ்ணா இயக்கம்'' இந்தியாவிலும் ரஷியாவிலும் ''பஜனைப் போராட்டங்களை'' நடத்திவருகின்றன.
இந்துக்களின் கடவுளாக கருதப்படுபவர் தான் ''கிருஷ்ண பரமாத்மா'' அவரின் ''புகழையும் , பெருமையையும் பிரச்சாரம் செய்வதற்கென்றே ''இஸ்கான்'' என்ற இந்த ''ஹரே கிருஷ்ணா கோஷ்டி'' தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் தோற்றத்திற்கான காரணகர்த்தா அமெரிக்கா தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் பறந்து விரிந்து வாழவேண்டும் என்ற நோக்கத்தில் தான், இதுநாள் வரையில் அமெரிக்கா பெருத்த நிதி கொடுத்து கொழுக்க வளர்த்திருக்கிறது.
இதை ஏன் அமெரிக்கா வளர்க்கவேண்டும் என்றால்....இதுபோன்ற மதவாத இயக்கங்கள் - ஆன்மீக இயக்கங்கள் வளர்ந்தால் தான், உலகத்தில் எந்த மூலையிலும் ''கம்யூனிசம்'' வளர்ந்துவிடாமல், முதலாளித்துவம் வாழமுடியும். இது தான் இதிலிருக்கிற முக்கிய காரணம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்துக்கடவுள் பல பேர் இருக்கும் போது கிருஷ்ணனை ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும்....? அதற்குப்பின்னாலும் மிகப்பெரிய காரணம் இருக்கிறது. அது என்னவென்றால்.... கடவுள்களிலேயே மனிதர்களைப்போல் தொற்றமளிக்கக்கூடியவர்கள் மூன்று பேர். முருகன், ராமன், கிருஷ்ணன் ஆகியவர்கள் தான் அந்த மூன்று பேர். அவர்களில் முருகன் தமிழ்க் கடவுள். அவரின் எல்லை தமிழ்நாடோடு சரி. அடுத்து ராமனை எடுத்துக்கொண்டால்.... புராணங்களில் ராமனை ஒரு போண்டாட்டிக்காரனாகவும், ஒழுக்கமுள்ளவனாகவும், தாய் தந்தை சொல் தட்டாதவனாகவும், யுத்த தர்மம் உள்ளவனாகவும் காண்பிக்கப்படுகிறது. ஒரு சராசரி மனிதனை விட அதிகமாக காண்பிக்கப்படும் கதாபாத்திரம் தான் ராமன். ராமன் பெயரில் இயக்கம் நடத்தினால் உளவியல் ரீதியாக மக்கள் இவ்வளவு கட்டுபாடுகள் கொண்ட ராமன் பெயரில் இந்த இயக்கம் நடைபெறுவதால் இந்த இயக்கத்திலும் கடுமையான கட்டுபாடுகள் இருக்குமோ என்று மக்கள் இந்த இயக்கத்தோடு ஒட்டமாட்டார்கள் என்பதனால் தான் கிருஷ்ண இயக்கமாக ஆரம்பித்தார்கள். கிருஷ்ணனை பொறுத்தவரை சராசரி மனித குணங்கள் அத்தனையும் இருக்கும். சிறு வயதில் அம்மாவிற்கு தெரியாமல் வெண்ணை திருடி சாப்பிடுவது, தவறுகள் செய்துவிட்டு அம்மாவிடம் பொய் சொல்லுவது - மறைப்பது போன்ற தவறுகளையும் செய்வார். பெண்களிடம் பாலியல் சீண்டல்கள், பெண்கள் குளிக்கும் போது அவர்களது ஆடைகளை தூக்கிச் செல்வது - குளிக்கும் போது பார்ப்பது - விமர்சனம் செய்வது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள், நண்பர்களோடு ஊர் சுற்றித் திரிவது, சகோதரர்கள் மத்தியில் போர் செய்யத் தூண்டுவது, யுத்தத் தந்திரம் என்ற பெயரில் யுத்தத் தர்மத்திற்கு எதிராக ஆலோசனை வழங்குவது போன்ற ஒழுங்கின்மையும், கலாச்சார சீர்கேடும் கொண்டவராகத்தான் புராணங்களில் கிருஷ்ணன் ஒரு பரமாத்மாவாக காட்டப்படுகிறார்.
இப்படிப்பட்டவர் பெயரில் ஒரு இயக்கமென்றால் மக்களுக்கும் எந்த பிரச்சனைகளும் கிடையாது. அதன் மூலம் உலக மக்கள் அனைவரையும் கவரமுடியும். குறிப்பாக இளைஞர்களை இந்த இயக்கத்தின் பால் ஈர்க்கமுடியும். அதன் மூலம் இயக்கத்தை வளர்த்து - கிருஷ்ண பக்தியை வளர்த்து, ஆன்மீகத்தை வளர்ப்பதன் மூலம் முதலாளித்துவத்தை பாதுகாக்கமுடியும். கம்யூனிசம் வளராமல் பார்த்துக்கொள்ளமுடியும். அதற்கு இந்த இயக்கம் வளர்வதற்கு ''பகவத்கீதை'' தேவைப்படுகிறது. இவர்களைப் பொறுத்தவரை பகவத்கீதை ஒரு பிரச்சார நோட்டீஸ் ஆக - பிரசுரமாக தான் பார்க்கிறார்கள். இவர்களது இயக்கப் பிரச்சாரத்துக்குத் தான் இந்த பகவத்கீதை பயன்படுகிறது. பெரும்பாலும் இதை எல்லோருக்கும் இலவசமாகத்தான் வழங்குகிறார்கள் அல்லது மிகக் குறைந்த விலைக்கு விற்கிறார்கள். அறுபது உலக மொழிகளில் அச்சிடப்படுகிறது. இதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.
இந்த புத்தகத்தில் தான் இவர்கள் பிரச்சாரமே இருக்கிறது. அதை தடை செய்தால் இவர்களது ''கிருஷ்ண லீலைகள்'' பிரச்சாரம் தடைப்பட்டுவிடும் என்ற பயம் தான் இன்று அவர்களின் போராட்டம் என்பதை மறுத்துவிடமுடியாது. அது மட்டுமல்ல இன்று இந்தத் தடையை அனுமதித்தால் உலக நாடுகள் முழுதும் இதே தடையை செய்யத் தொடங்கிவிடும் என்கிற அச்சமும் அவர்களுக்கு இருக்கிறது.
No comments:
Post a Comment