நியூயார்க்:மத தலைவர்களுடன் நியூயார்க் மேயர் நடத்தும் வருடாந்திர காலை உணவு விருந்து நிகழ்ச்சிக்கான அழைப்பை அமெரிக்காவின் மஸ்ஜித் இமாம்கள் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் புறக்கணித்துள்ளனர்.
நியூயார்க் போலீஸ் துறை முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலங்களையும், வியாபாரங்களையும் கண்காணிப்பதற்கும், முஸ்லிம்கள் குறித்து தனிப்பட்ட ரீதியாக தகவல்களை ரகசியமாக சேகரிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்த புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக முஸ்லிம் தலைவர்கள் நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க்கிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
நியூயார்க் போலீஸின் முஸ்லிம் விரோத ரகசிய நடவடிக்கைகள் குறித்து அசோசியேட் ப்ரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால், இதுக்குறித்து நியூயார்க் மேயரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,’குறைவான தலைவர்களே காலை உணவு விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். அதிகமானோர் கலந்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்’ என கூறினார்.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment