ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளின் தலைமை இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸுடன் அன்னா ஹஸாரேக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகள் அவரை கைவிட்டன.
மும்பை எம்.எம்.ஆர்.டி.எ மைதானத்தில் ஹஸாரே நடத்திய போராட்டத்தில் சிறுபான்மை அமைப்புகள் கலந்துக்கொள்ளவில்லை.ஹிட்லரின் தந்திரங்களை ஹஸாரே கையாளுவதாக முஸ்லிம் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.காங்கிரஸையும், சோனியாவையும் மட்டும் ஹஸாரே குறிவைப்பது ஏன்? என கிறிஸ்தவ அமைப்புகள் கேள்வி எழுப்புகின்றன.ஹிந்துத்துவா தொடர்பு குறித்து ஹஸாரே விளக்கம் அளிக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாராளுமன்ற நடவடிக்கைகளை மதித்து உண்ணாவிரத போராட்டத்தை ஹஸாரே வாபஸ் பெறவேண்டும் என ஜம்யத்துல் உலமா மஹராஷ்ட்ரா செயலாளர் குல்ஸார் ஆஸ்மி கூறினார்.
நரேந்திரமோடி, எடியூரப்பா போன்ற பா.ஜ.க தலைவர்களுக்கு எதிராகவும், சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராகவும் ஹஸாரே ஏன் குரல் எழுப்பவில்லை என கிறிஸ்தவ செக்குலர் ஃபாரம் பொது செயலாளர் ஜோஸஃப் டயஸ் கேள்வி எழுப்புகிறார்.கடந்த திங்கள் கிழமை ஹஸாரே குழுவின் முக்கிய நபரான அரவிந்த் கேஜ்ரிவால் முஸ்லிம் தலைவர்களுடன் சந்திப்பை நடத்தியிருந்தனர் என்பது குறுப்பிடத்தக்கது.
நன்றி கரீம்
No comments:
Post a Comment