டெஹ்ரான்:ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஈரானின் தூதர்கள் மத்தியில் கடந்த புதனன்று உரையாற்றிய ஈரானின் முன்னால் அதிபரும் முதுபெரும் தலைவரான ஆயத்துல்லா கொமேனி; தற்போது அரபு நாடுகளில் இஸ்லாமிய கட்சிகள் வெற்றி எண்ணிக்கைகளை மேற்கத்திய ஊடகங்கள் வெளியிடுவது பிராந்தியத்தில் இஸ்லாமிய போராட்டங்களை வலுவை காட்டுகிறது.
பிராந்தியத்திலும், ஐரோப்பாவிலும் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் பெரிய முன்னேற்றங்கள் நிகழ்ந்து வருவதாகவும் அதை நாம் உற்று நோக்குவது முக்கியமானது என்றும் குறிபிட்டுள்ளார். மேலும் அரபு நாடுகளில் நடக்கும் போராட்டங்களுக்கு பின்னால் அமெரிக்கா இருந்து செயல் படுவதாக கருதுகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை எனவும் 30 ஆண்டுகளுக்கு முன்னால் ஈரானில் நடைபெற்ற இஸ்லாமிய புரட்சியையும் இதுபோல் தான் கூறினர். ஆனால் மேலும் தற்போதைய நிகழ்வுகளுக்கும் முன்னர் நடந்த போராட்டங்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசமே அமெரிக்காவின் பங்கும் எதிர்ப்பும்தான் என்று ஆயத்துல்லா கொமேனி தெரிவித்துள்ளார்.
மேலும் அரபு நாடுகளில் நடுக்கும் மாற்றத்தையும் மற்றும் உலகத்தில் நடக்கும் மாற்றங்களையும் உற்று கவனிக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். மேலும் இந்த போராட்டங்கள் அவர்களின் விழிப்புணர்வை காட்டுகிறது என்றும் இந்த விழுப்புணர்வு இஸ்லாமிய ரீதியானது, அரபு நாடுகளில் ஏற்படும் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிரானது என்றும் கூறினார்.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment