செய்திகளும் | உண்மைகளும் | |
சிறுபான்மை ஒதுக்கீடு ஒரு மோசடி - பிரதமருக்கு கறுப்புக்கொடி : தமுமுக, போராட்டம்! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மத்திய அரசின், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சிறுபான்மையினருக்கு, பிற்படுத்தபட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில், 4.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும், என நேற்று மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவு ஒரு ஏமாற்று வித்தையாகும். அக்டோபர் 2004ல் மத்திய அரசு, நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில், மத மற்றும் மொழி சிறுபான்னைமயினருக்கான, தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம், மே 2007ல் தனது அறிக்கையை சமர்பித்தது. இந்த ஆணையத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை, மன்மோகன் சிங் அரசு தாமதப்படுத்தியது. இந்த ஆணையத்தின் அறிக்கை, பத்திரிகைகளில் வெளியான பிறகு, டிசம்பர் 2009ல் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது, சிறுபான்மையினருக்கு, 4.5 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்படுமென, மத்திய அமைச்சரவை நேற்று முடிவு செய்துள்ளது. மிஸ்ரா ஆணையததின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக, இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மிஸ்ரா ஆணையம் தனது பரிந்துரையில், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 15 விழுக்காடு, மதவழி சிறுபான்மையினருக்கு அளிக்க வேண்டும். அதில் 10 விழுக்காடு முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டுமென குறிப்பிட்டார்கள். இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கு முரணானது இல்லை, என்றும் ஆணையம் தெரிவித்தது. இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது மத்திய அரசுக்கு சிரமமாக இருந்தால், மண்டல் ஆணைய பரிந்துரையின் படி பிற்படுத்த்ப்பட்ட வகுப்பினருக்கான, 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில், மதவழி சிறுபான்மையினருக்கு 8 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், என்றும் அதில் 6 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டுமென, பரிந்துரைச் செய்தது. ஆனால் தற்போது மத்திய அரசு, மிஸ்ரா ஆணையத்தின் இந்த இரண்டு பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளாமல், இதர பிற்படுத்தப்பட்டோர பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து சிறுபான்மை வகுப்பினருக்கும் 4.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு அளிக்க முடிவுச் செய்துள்ளது. இந்த உத்தரவின் படி இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்த்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள் முதலியோருக்கு இந்த உள்ஒதுக்கீடு அளிக்கப்படும். இத்தகைய இடஒதுக்கீட்டினால், எந்தவொரு பலனும் முஸ்லிம்களுக்கும் இதர சிறுபான்மை மக்களுக்கும் கிடைக்கப் போவதில்லை. மிஸ்ரா ஆணையம், 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு, தனியாக 6 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென பரிந்துரைத்தையும், மத்திய அரசு புறந்தள்ளி முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளது. மன்மோகன் சிங் அரசு, முஸ்லிம்களுக்கு தொடர்ந்து இடஒதுக்கீடு பிரச்னையில் செய்துவரும் துரோகத்தை கண்டிக்கும் வகையிலும், 4.5 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற ஏமாற்று வித்தையை, உடனடியாக வாபாஸ் வாங்க கோரியும், மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க கோரியும், தமிழகத்திற்கு வரும் பிரதமருக்கு, சென்னையிலும் காரைக்குடியிலும் கறுப்புக்கொடி காட்டும் பேராட்டத்தை, தமுமுக நடத்தும். | பிரதமருக்கு கறுப்புக்கொடி : த.மு.மு.க, வின் செயல், அபத்தமானது - ஆபத்தானது ! அரசியல்வாதிகள் என்றாலே ஏமாற்றுக்காரர்களாகத் தான் இருப்பார்கள், என்ற கருத்தில், யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. மேலும் இந்த ஓதிக்கீட்டில், பல சிறுபான்மை மதங்களை இனைத்ததோடல்லாமல், மொழி சிறுபான்மையினர், என்ற ஒரு பிரிவினரையும், இதில் இணைத்துள்ளதை ஏற்க முடியாது. சிறுபான்மை மொழியான, சமஸ்கிருதம் பேசுகிறோம் என்று சண்டாள பேர்வழிகள்,(இவர்கள் ஒரு பக்கம் சிறுபான்மை சலுகைகள் கூடாது என்பர்,மறு பக்கம் மொழி சிறுபான்மையினர் என சொல்லிக் கொண்டு, பின்வாசல் வழியாக அனைத்தையும் அபகரிக்கும் கூட்டம்)காஞ்சி சங்கராச்சியார் உட்பட அவாள்கள் பலர் மொழி சிறுபான்மை ஒதுக்கீடு, என்ற பெயரால், பல்லாயிரம் கோடிகளையும், பல சலுகைகளையும், காலம் காலமாக அனுபவித்து வருவது, நாட்டு மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. என்றாலும், தற்போது மத்திய அரசு எடுத்துள்ள, 4.5% என்ற இந்த ஒதுக்கீடு, முஸ்லிம்களுக்கு முழுமையான நிவாரணமாக இருக்காது, என்றாலும் நான்கில் ஒரு பங்கு, என்ற அளவில் பயன் உண்டாகும், என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். தவிர, என்ன மாதிரியான விஷயங்களுக்கு கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள், என்பதெல்லாம் ஒரு வரைமுறைக்கு உட்படுத்த வேண்டும். தற்போதுள்ள சூழலில் முல்லை பெரியாறு, கூடங்குளம் போன்ற விஷயத்திற்காக, தமுமுக, கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினால், ரசிக்கும்படியாகவும், மத்திய அரசை வழிக்கு கொண்டு வரும் வகையிலும், அது அமையும். தவிர, தமுமுக, வைக்கும் கோரிக்கையில், தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த ஒதிக்கீட்டை, உடனடியாக வாபாஸ் வாங்க வேண்டும், பிறகு, மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், என்ற கோரிக்கையில், எத்தனை ஆபத்து உள்ளது என்பதை, தமுமுக தலைமை சிந்திக்க வேண்டும். இந்திய முஸ்லிம்களின் இந்த பின்னடைந்த நிலைக்கு என்ன காரணம், இந்த தேசத்தை, வெள்ளைக் காரனிடமிருந்து மீட்பதற்காக முஸ்லிம்கள் எந்தளவிற்கு தியாகம் செய்தனர், ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் முஸ்லிம்கள் செய்த தியாகங்கள்..., முஸ்லிம்கள், ஆங்கிலேயர்களின், ஆங்கில மொழியை எதிர்த்தனர். ஆங்கிலேய அரசின் வேலை வாய்ப்புகளை இழந்தனர் அவர்களின் மூலம் கிடைத்த கல்வியை பெற தவறினர். இந்த சரித்திரங்கள் எல்லாம், பல தீய சக்திகள் மறைக்க முற்பட்ட போதும், உண்மை பல வகையிலும், பல வரலாற்று ஆசிரியர்கள் மூலம் அவ்வப்போது வெளிவந்துள்ள, பல ஆதாரங்களையும் திரட்டி, மக்கள் மன்றத்தில் வைத்து மக்களின் நல்லாதரவையும் பெற வேண்டும். அத்துடன் அடுத்தடுத்து பல்வேறு போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் மூலம், நமது கோரிக்கைகளை நிறைவேற்ற, நிர்பந்திக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் இது போன்ற ஆரோக்கியமான பல வழிகள் இருக்கும் போது-பல பொறுப்பான பணிகள் இருக்கும் போது, (பொன்னை வைத்து பார்க்கும் இடத்தில், பூவை வைத்துள்ள மத்திய அரசை எதிர்த்து, இப்போது) இது போன்ற கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள் அபத்தமானது. இந்த ஒதுக்கீட்டை உடனடியாக, வாபாஸ் வாங்க வேண்டும் என்பது, அதைவிட ஆபத்தானது. நன்றி மறுப்பு .இன் |
No comments:
Post a Comment