Friday, December 30, 2011

இந்திய-இஸ்ரேலிய விமானப் படைகளின் புதிய பெண் விமானிகள்!




Israeli Prime Minister Binyamin Netanyahu today (Thursday) reiterated his opposition to discrimination against women, citing the five female soldiers graduating from the Israel Air Force pilot’s course as an example of women’s equality. Speaking at the IAF pilot’s course graduation ceremony at the Hatzerim Air Force Base in the Negev, Netanyahu said that “in the State of Israel, in which women sit in the cockpit, women can sit in any place.”

On the same day in India, A total of 175 Flight Cadets including 30 Women Flight Cadets passed out of the Air Force Academy, Dundigal, Hyderabad, as newly commissioned officers to join the Indian Air Force in respective branches today. General VK Singh, Chief of the Army Staff was the Reviewing Officer for the Combined Graduation Parade which marked the culmination of basic as well as professional training of the flight cadets.

இஸ்ரேலிய விமானப்படை IAF (Israel Air Force) மற்றும் இந்திய விமானப்படை IAF (Indian Air Force) ஆகிய இரண்டுக்கும் பெயரில்தான் ஒற்றுமை என்றில்லை, மற்றொரு விஷயத்திலும் ஒற்றுமை உள்ளது போலிருக்கிறது. இந்த ஒற்றுமை பெண் விமானிகள் தொடர்பானது!
இரு நாடுகளிலும், பெண்களை விமானப்படையில் இணைத்துக் கொள்ளும் விஷயம் தொடர்பாக கடந்த காலத்தில் சர்ச்சைகள் இருந்தன. (இந்திய பழமைவாதிகளும், இஸ்ரேலிய ஹரேடி (ultra-Orthodox) மதவாதிகளும், பெண்கள் இப்படியான பணிகளுக்கு நியமிப்பதை அவ்வளவாக விரும்புவதில்லை)
சரி. ஒற்றுமை என்ன?
இரு விமானப்படைகளும் இன்று (வியாழக்கிழமை) தமது புதிய விமானிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வை

இந்திய விமானப்படையில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக இணையும் பெண்கள்
நடத்தியுள்ளன. இஸ்ரேலிய விமானப்படையில் 5 பெண்கள் புதிய விமானப்படை விமானிகளாக இன்றிலிருந்து பணியில் இணைகிறார்கள். இந்திய விமானப்படையில்? மொத்தம் 30 பெண்கள்!
இஸ்ரேலிய விமானப்படையின் பட்டமளிப்பு நெகெவ் நகரிலுள்ள ஹட்செரிம் விமானத் தளத்தில் இன்று நடைபெற்றது.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாகு நேரில் கலந்துகொண்டு பேசும்போது, “எமது நாட்டின் பழமைவாதிகள் சிலர் (வெளிப்படையாக ஹரேடி மதவாதிகள் என்று சொல்லவில்லை) பெண்கள் ராணுவப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்கிறார்கள். ஆனால், எமது அரசின் நிலைப்பாடு அதுவல்ல. எமது பெண்களை விமான காக்பிட்டில் அமர வைப்பதில் எமக்கு தயக்கம் ஏதுமில்லை” என்றார்.
அதே தினத்தில் இந்தியாவின் ஹைதராபாத் நகரிலுள்ள ஏர்போர்ஸ் அகாடமியில் 175 புதியவர்களுக்கான

இஸ்ரேலிய விமானப்படையின் எஃப்-16 போர் விமானத்தில் பெண் விமானி.
பட்டமளிப்பு நடைபெற்றுள்ளது. இந்த 175 பேரும் ஏர்போர்ஸ் அகடாமி ஹைதராபாத், ஏர்போர்ஸ் அட்மினிஸ்ட்ரேட்டிவ் காலேஜ் கோயம்புத்தூர், ஏர்போர்ஸ் ஸ்டேஷன் ஹக்கீம்பேட், யேலங்கா, பெகும்பேட் ஆகிய வெவ்வேறு இடங்களில் பயிற்சி பெற்றவர்கள். இவர்களில் 30 பேர் பெண்கள்.
இந்திய விமானப்படையின் பட்டமளிப்புக்கு பிரதமர் வரவில்லை. இந்திய ராணுவத்தின் சீஃப் ஆப் ஸ்டாஃப் ஜெனரல் வி.கே.சிங் இந்த வைபவத்தில் கலந்துகொண்டார்.

நன்றி விறுவிறுப்பு.காம்

No comments:

Post a Comment