Tel Aviv, Israel: The head of Israel’s Mossad spy agency has said a nuclear Iran might not pose an “existential threat” to the Jewish state, in remarks reported today (Thursday) by Haaretz newspaper. The daily quoted Mossad chief Tamir Pardo as telling a group of Israeli ambassadors. His remarks, stood in contrast to the position of Prime Minister Benjamin Netanyahu which was laid out two months ago in remarks at the opening of the parliament’s winter session. “A nuclear Iran would pose a grave, direct threat to us too”.
இஸ்ரேலில் அரசுக்கு அடுத்தபடியாக அதி சக்திவாய்ந்த தனி ஏஜென்சியாகக் கருதப்படும் உளவுத்துறை மொசாத்தின் தலைவர், வெளிப்படையாகத் தெரிவித்துள்ள கருத்து ஒன்றின்மூலம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார். “ஈரானின் கையில் அணு ஆயுதங்கள் இருந்தாலும், அது நேரடியாக இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் கிடையாது” என்பதுதான் ஆச்சரியத்துக்குரிய அவரது கூற்று.
உளவுத்துறைத் தலைவர் தாமிர் பார்டோவின் இந்தக் கருத்து இன்று (வியாழக்கிழமை) ஹாரெட்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. ஹாரெட்ஸ், இஸ்ரேலின் மிகப் பழமையான தினப் பத்திரிகை. இதில் வெளியாகும் கருத்துக்கள், இஸ்ரேலிய அரசின் நிலைப்பாடாக எடுத்துக் கொள்ளப்படுவது வழக்கம்.
இஸ்ரேலியத் தூதர்களுடன் சிட்சுவேஷன்-ரிப்போர்ட் கலந்துரையாடலில், இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள ராணுவ அச்சுறுத்தல்கள் தொடர்பாக இவரது பிரீஃபிங் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கு ஈரான் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறதா? இந்தக் கேள்விக்கு எனது பதில், ‘ஆம்’ என்பதுதான். அவர்களால் ராணுவ ரீதியில் எமக்கு அச்சுறுத்தல் உள்ளது. ஆனால், அவர்கள் கைகளில் அணு ஆயுதங்கள் கிடைத்தால், இஸ்ரேலுக்கு கடும் அச்சுறுத்தல் என்று சொல்லப்படுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியாது”
“ஈரானின் கைகளில் அணு ஆயுதங்கள் வந்தால், அதற்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பதும் எமக்குத் தெரியும். பதிலடி கொடுப்பதற்கு தேவையான சாதனங்களும் எம்மிடம் உள்ளன” என்றும் உளவுத்துறையின் தலைவர் கூறியுள்ளார்.
உளவுத்துறைத் தலைவரின் இந்த ஸ்டேட்மென்டில் உள்ள ஆச்சரியமான விஷயம், நாட்டின் பிரதமர் கூறியுள்ள கருத்துக்கு நேர்மாறாக உள்ளது இந்தக் கருத்து என்பதுதான். இஸ்ரேலிய நாடாளுமன்ற தொடக்க நிகழ்வில் எம்.பி.க்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாகு, “ஈரானின் கைகளில் எந்த நிமிடமும் அணு ஆயுதம் தோன்றலாம் என்ற நிலை உள்ளது. அவர்களிடம் அணு ஆயுதம் கிடைத்தால், பிரதான அச்சுறுத்தல் எமக்குத்தான்” என்று கூறியிருந்தார்.
இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் தினத்தன்று, அதாவது 2 மாதங்களுக்கு முன், தமக்கு அச்சுறுத்தல் உள்ளதை பிரதமர் ஒப்புக் கொண்டிருந்தார். அந்த நிலை, இந்த இரு மாதங்களில் மாற்றமடைந்துள்ளது.
அதுதான் எப்படி என்பதுதான் உளவுத்துறைத் தலைவரின் கருத்து ஏற்படுத்தியுள்ள கேள்வி!
உளவுத்துறை மொசாத், ஈரானின் அணுசக்தி ஆலைகளை அழிப்பதற்கு எப்போதும் திட்டங்களைத் தீட்டிக்கொண்டும், உளவாளிகளை அனுப்பிக் கொண்டும் உள்ளது. ஈரானிய அணு ஆலைகளில் முக்கியமான இரண்டை குண்டு வைத்துத் தகர்க்கும் மொசாத்தில் முயற்சிகள் இரு தடவைகள் தோல்வியில் முடிவடைந்திருந்தன. ஆனாலும் முயற்சிகளை மொசாத் இன்னமும் கைவிட்டதாக தெரியவில்லை.
உளவுத்துறைத் தலைவரின் கூற்றைப் பார்த்தால், கைவசம் புதிதாக ஏதோ திட்டம் இருப்பது வாய்தவறி வெளியே வந்துவிட்டது போல தெரிகிறதே!
நன்றி விறுவிறுப்பு
No comments:
Post a Comment