Monday, January 23, 2012

புரட்சி நினைவு தினம்: எகிப்தில் 1959 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

imagesCA33ZQ2T
கெய்ரோ:எகிப்தில் 1959 சிறைக் கைதிகளுக்கு ராணுவ கவுன்சில் தலைமையிலான அரசு பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.
சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலகிய பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ராணுவ கவுன்சில் தலைவர் ஹுஸைன் தன்தாவி ராணுவ நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்கி உத்தரவிட்டார். எகிப்து நாட்டில் புரட்சி வசந்தம் வீசத்துவங்கி ஒரு வருடம் நிறைவுறுவதையொட்டி இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி25-ஆம் தேதி எகிப்து புரட்சியின் முதல் நினைவு தினமாகும்.

உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி கவலைக்கிடமாக உள்ள சமூக ஆர்வலர் நபீலும் விடுதலைச் செய்யப்படும் கைதிகளில் அடங்குவார். சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கண்டனத்தைத் தொடர்ந்து நபீலின் சிறைத்தண்டனை கடந்த டிசம்பர் மாதம் 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைக்கப்பட்டது.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment