Sunday, January 22, 2012

சுனில்ஜோஷி படுகொலை: பிரக்யாசிங்கின் மனு தள்ளுபடி

பிரக்யாசிங்
மும்பை:ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுனில் ஜோஷியை கொலை செய்த வழக்கில் விசாரணைச்செய்ய தன்னை விமானம் அல்லது ரெயிலில் குளிரூட்டப்பட்ட கம்பார்ட்மெண்டிலோ போபாலுக்கு கொண்டு செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரும் ஹிந்துத்துவா பெண் பயங்கரவாதி பிரக்யாசிங்கின் மனுவை நீதிமன்றம் தள்ளபடிச் செய்தது.

2008-ஆம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரக்யாசிங் பயணச்செலவை தானே செலுத்துவதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் special Maharashtra Control of Organised Crime Act (MCOCA) நீதிமன்றம் அவரது கருத்தை ஏற்கவில்லை. இத்தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகப்போவதாக பிரக்யாசிங்கின் வழக்கறிஞர் கணேஷ் ஸோவானி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment