அஹ்மதாபாத்:குஜராத் முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமாரும், மோடி அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டும் குஜராத் இனப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக தங்களிடையே நிலவிய பகைமையை மறந்துவிட்டு ஒன்றிணைய தீர்மானித்துள்ளார்கள்.
குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக ஒன்றாக செயல்பட தயார் என சஞ்சீவ் பட் நேற்று முன்தினம் ஒரு காலத்தில் தனது மேல் அதிகாரியான ஸ்ரீகுமாருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
தங்களிடையே நிலவும் பகையுணர்வு அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதோடு, இனப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகிடைப்பது இயலாமல் ஆகிவிடும் என பட் குறிப்பிட்டிருந்தார்.
சஞ்சீவ் பட்டின் கோரிக்கையை வரவேற்பதாகவும், இருவருக்கும் இடையேயான பிரச்சனைகள் தன்னை மிகவும் வேதனை அடையச் செய்ததாகவும் ஸ்ரீகுமார் சஞ்சீவ் பட்டிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் எதிரிகளுக்கு எதிராக தீரமாக போராடும் சஞ்சீவ் பட்டைப்போன்ற ஒருவருக்கு எதிராக தான் ஒருபோதும் மோசமாக ஒன்றும் செய்யவில்லை என ஸ்ரீகுமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நீதிக்கான
போராட்டத்தில் தன்னுடைய அனைத்து உதவிகளையும் சஞ்சீவ் பட் எதிர்பார்க்கலாம் என ஸ்ரீகுமார் சஞ்சீவ் பட்டிற்கு உறுதி அளித்துள்ளார்.
போராட்டத்தில் தன்னுடைய அனைத்து உதவிகளையும் சஞ்சீவ் பட் எதிர்பார்க்கலாம் என ஸ்ரீகுமார் சஞ்சீவ் பட்டிற்கு உறுதி அளித்துள்ளார்.
இனப்படுகொலை நிகழ்ந்து 9 ஆண்டுகள் கழித்து நரேந்திர மோடிக்கு எதிராக களமிறங்கிய சஞ்சீவ் பட்டின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகத்தை எழுப்பி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நானாவதி கமிஷனுக்கு ஸ்ரீகுமார் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே அறிக்கை போர் துவங்கியது.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment