Saturday, January 7, 2012

உஸாமா பற்றிய திரைப்படம்: அமெரிக்கா விசாரணை

imagesCAGH49FJ
வாஷிங்டன்:உஸாமா பின்லேடனின் மரணத்தை அடிப்படையாக கொண்டு இயக்குநர் காதரின் பிகலோ இயக்கும் திரைப்படம் குறித்து அமெரிக்கா விசாரணை நடத்தி வருகிறது.
உஸாமாவின் கொலையை குறித்து முக்கிய ரகசியங்களை காதரினுக்கு அமெரிக்க அதிகாரிகள் ரகசியமாக கசியவிட்டதாக கிடைத்த தகவலை தொடர்ந்து இவ்விசாரணையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் அமெரிக்க கமாண்டோக்களின் பின் லேடன் ஆபரேசன் குறித்த தகவல்கள் பிகலோவிற்கு கிடைத்தது தெரியவந்தது.
இவ்விவகாரத்தை சுட்டிக்காட்டி குடியரசு கட்சியின் பிரதிநிதி பீட்டர் கிங் சி.ஐ.ஏ, எஃப்.பி.ஐ ஆகிய புலனாய்வு அமைப்புகளுக்கு கடிதம் எழுதினார். ஆனால், கிங்கின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என வெள்ளைமாளிகை வட்டாரங்களின் நிலைப்பாடாகும்.
ஈராக் போரைக் குறித்து பேசும் ஹார்ட் லாக்கர் என்ற திரைப்படத்திற்கு 2008-ஆம் ஆண்டு சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை பெற்ற காதரின் பிகலோ, சோனி பிக்சர்ஸுடன் இணைந்து பின் லேடன் கொலை தொடர்பான திரைப்படத்தை இயக்குகிறார்.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment