காபூல்:குவாண்டனாமோ சிறைக் கொட்டகையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை கத்தர் நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என பேச்சுவார்த்தையின் போது தாலிபான் கோரிக்கை விடுத்ததாக ஆப்கான் அரசின் செய்தி தொடர்பாளர்
தெரிவித்துள்ளார்.
தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆப்கான் அதிபர் ஹமீது கர்ஸாயி கைதிகளை ஆப்கானிஸ்தானிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரினார் என அவருடைய செய்தித் தொடர்பாளர் அய்மன் ஃபைஸி கூறுகிறார்.
அமெரிக்க பிரதிநிதிகளும், தாலிபானும் பல தடவை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இதனை தாலிபான் உறுதிச் செய்யவில்லை. டிசம்பரில் பெர்ன் மாநாட்டிற்கு முன்பு இக்கோரிக்கையை தாலிபான் முன்வைத்துள்ளது.
குவாண்டனாமோ சிறையில் உள்ள தாலிபான் கைதிகளை விடுதலைச்செய்ய வேண்டும், அந்நிய ராணுவம் ஆப்கானை விட்டு வெளியேறவேண்டும் என்பதுதான் தாலிபானின் முக்கிய கோரிக்கைகள் என ஃபைஸி கூறுகிறார்.
அமெரிக்காவிற்கும், தாலிபானுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தை எங்களின் தலைமையில் நடக்கவேண்டும் என ஃபைஸி கூறுகிறார். கைதிகளை விடுதலைச் செய்ய கருதவில்லை என அமெரிக்கா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, தெற்கு ஆப்கானிஸ்தானில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் எட்டு நேட்டோ படையினர் கொல்லப்பட்டனர். வியாழக்கிழமை மாலையில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் மூன்று பேரும், நேற்று நடந்த தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர். இவர்கள் எந்த நாட்டை சார்ந்தவர்கள் என்பதை நேட்டோ தெரிவிக்கவில்லை.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment