வாஷிங்டன்:அனைத்து முஸ்லிம்கள் மற்றும் அரபு வம்சா வழியை சார்ந்தவர்கள் மீதான வெறுப்புதான் முஸ்லிம்களின் மஸ்ஜித் மீது குண்டுவீச காரணம் என நியூயார்க் போலீசாரால் கைது செய்யப்பட்ட ரே லேசியர் லெங்கன்ட் கூறியுள்ளான்.
கிறிஸ்துமஸ் தினத்தில் நியூயார்க் நகரத்தில் மஸ்ஜித் அடங்கிய இஸ்லாமிய மையம் மற்றும் ஹிந்துக் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்திய ரே லேசியர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் இதனை தெரிவித்துள்ளான்.
மேலும்,’முஸ்லிம்களை எனது உயிருக்கு அச்சுறுத்தலாக கருதுகிறேன். குண்டுவீச்சு தாக்குதலின் மூலம் முஸ்லிம்களுக்கு அதிகபட்சமான இழப்பை ஏற்படுத்துவதுதான் எனது திட்டம்’ என ரே லேசியர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.
கயானாவில் இருந்து குடியேறி அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ள ரே லேசியர் மீது ஆயுள்தண்டனை விதிக்கப்படும் வகையிலான குற்றத்தை போலீசார் சுமத்தியுள்ளனர்.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment